மதுரையில் நள்ளிரவில் ஏற்பட்ட கார் விபத்தில் கார், கடைகள் தீபற்றியதில் 4 வாலிபர்கள் அதிஷ்ட வசமாக உயிர் தப்பினர்
மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் சுகன் வயது 24/22, இவரது நண்பர்கள் பார்க்டவுனை சேர்ந்த அபு வயது 25/22, தபால் தந்தி நகரை சேர்ந்த ஜாஸ் அஹமது வயது 25/22, ஹாஸ் அஹாமது வயது 25/22, இவர்கள் 4 பேரும் கடந்த 29 ம் தேதி நள்ளிரவு 1.30 மணியளவில் சிம்மக்கல்லிலிருந்து பெரியார் பஸ் நிலைய சாலையில் காரில் வந்தனர். காரை சுகன் ஓட்டி வந்தார். அவர் காரை அதி விரைவாக ஓட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரத்தில் இருந்த. போக்குவரத்து சிக்னல் கம்பத்தில் மோதியது. மேலும் அங்கிருந்த கடை மற்றும் மின் கம்பத்தில் அடுத்தடுத்து மோதி நின்றது. மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்தது. காரின் முன் பகுதியில் குபுகுபு என புகை வந்தது அதி வேகமாக வந்த கார் விபத்தில் சிக்கியதை அந்தப்பகுதியில் இருந்த சுமைதூக்கும் தொழிலாளிகள் பார்த்தனர். அவர்கள் உடனடியாக அங்கு வந்து காரில் இருந்த 4 பேரையும் மீட்டனர். அவர்கள் வெளியை வந்தவுடன் கார் தீப்பிடித்து எரிந்தது. காரில் எரிந்த தீ அங்கிருந்த செல் போன் கடை மற்றும் மின் கம்பத்தில் பரவியது. இது குறித்து பெரியார் நிலைய தீயணைப்பு படையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் திரு வெங்கடேசன் அவர்களின் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இருந்த போதிலும் செல் போன் கடையின் முன் பகுதியில் இருந்த போர்ட்டு மற்றும் மின் வயர்கள் எரிந்து சேதமடைந்தது. காரில் வந்த 4 பேருக்கும் காயம் ஏற்பட்டிருந்தது. இதனால் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். காரில் வந்தவர்கள் குடி போதையில் இருந்ததாக தெரிகிறது. குடி போதையில் காரை அதி வேகமாக ஓட்டி வந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்படுகிறது இது தொடர்பாக திடீர் நகர் போக்குவரத்து புனாய்வு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.