Police Department News

மணலூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மளிகை கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக வியாபாரியை கைது செய்தனர்.

மணலூர்பேட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்ததாக மளிகை கடைக்கு அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர். இது தொடர்பாக வியாபாரியை கைது செய்தனர்.

திருக்கோவிலூர் அருகே உள்ள மணலூர்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் தலைமையிலான போலீசார் செல்லங்குப்பம் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி, அதில் வந்தவரிடம் விசாரித்தனர். அதில் அவர் ரிஷிவந்தியம் பெரியகுளம் தெருவை சேர்ந்த துரைசாமி மகன் கண்ணதாசன் (வயது 32) என்பது தெரியவந்தது.

மேலும் அவரிடம் விசாரித்த போது, தனது மளிகை கடைக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்வதாக கூறினார். இருப்பினும் அவரது நடவடிக்கை மீது சந்தேகமடைந்த போலீசார், அவர் கொண்டு வந்த பையை சோதனை செய்தனர். அதில் 20 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் எடுத்து வந்தது தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும்.

இதையடுத்து, அவரிடம் புகையிலை பொருட்களை யார் வழங்கினார் என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் அவர் அளித்த தகவலின் பேரில், மணலூர்பேட்டையை சேர்ந்த கோபால் என்பவரது கடைக்கு சோதனையிட போலீசார் சென்றனர்.

ஆனால் அங்கு அவர் இல்லை. இதையடுத்து, அவரது மளிகை கடைக்கு திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு தலைமையில் மணலூர்பேட்டை போலீசார் முன்னிலையில் சித்தாமூர் கிராம நிர்வாக அலுவலர் காமராஜ் ‘சீல்’ வைத்தார்.

இந்த சம்பவம் தொடர்பாக கண்ணதாசனை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.