துப்பாக்கி சுடுதலில் முதல் பரிசு வென்ற திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன்!
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் உத்தரவின்படி, திருச்சி மத்திய மண்டல காவல்துறை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை 1 ம் அணி மற்றும் தமிழ்நாடு சிறப்பு காவல்படை 10 ம் அணிகளுக்கு உட்பட்ட காவல் துணை கண்காணிப்பாளர் முதல், காவல்துறை தலைவர் வரையிலான அதிகாரிகளுக்கான Pistol 1 Revolver மற்றும் INSAS துப்பாக்கி சுடுதல் போட்டிகள் அக்.6 அன்று திருச்சியில் நடைபெற்றன .
இந்தத் துப்பாக்கி சுடுதல் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர், திருச்சி சரக காவல்துறை துணைத்தலைவர், காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் 20 காவல்துறை உயரதிகாரிகள் மத்திய மண்டல அளவில் கலந்து கொண்டனர்.
திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் 5.56 INSAS Rifle ரக துப்பாக்கி சுடுதல் போட்டியில் கலந்து கொண்டார்.25 காவல்துறை அதிகாரிகளுக்கிடையே நடைபெற்ற போட்டியில் கலந்து கொண்ட காவல் ஆணையர் முதல் பரிசினை பெற்றார்.
மேலும் நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒட்டு மொத்ததில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் 2ஆம் இடத்தை பிடித்தார்.
மேலும் கண்டோன்மெணட் காவல் சரக உதவி ஆணையர் 9mm பிஸ்டல் சுடுதல் போட்டியில் 3ஆ ம் இடத்தை பிடித்தார் .
பின்னர், நடந்த அனைத்து போட்டிகளிலும் ஒட்டு மொத்ததில் கண்டோன்மெண்ட் சரக உதவி ஆணையர் 3ஆம் இடத்தை பிடித்தார்கள். இத்துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற காவல்துறை அதிகாரிகளுக்கு திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் பரிசுகள் வழங்கி பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டார்.
இப்போட்டியில், திருச்சியில் காவல்துறை அதிகாரிகளுக்கு இடையேயான துப்பாக்கிச் சுடும் போட்டியில் திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் முதல் பரிசினை பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.