மதுரை மாவட்டத்தில் சட்ட விரோதமாக புகையிலை பொருட்கள் பதிக்கி வைத்திருந்த நான்கு நபர்கள் கைது
மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்வோருக்கு எதிராக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது
மதுரை சரகத்தில் போதைப் பொருட்களை கட்டுப்படுத்த தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மதுரை சரக காவல்துறை துணை தலைவர் அவர்களின் தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் ஶ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த அருண்பாண்டியன் என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் தன் நண்பர்களுடன் புகையிலைப் பொருட்களை மதுரை மாவட்டத்தில் சாப்டூர் பகுதியில் ஒரு தோட்டத்தில் பதுக்கி வைத்திருப்பதாக கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் தனிப்படையினர் சோதனை செய்து, சட்டத்திற்குப் புறம்பாக புகையிலைப் பொருட்களை பதுக்கி்வைத்திருந்த 1) சரவணன் மணிகண்டன் (33) ,
2) முத்துகுமார் (25) , 3) அருண்பாண்டியன் (27)
3 நபர்களை கைதுசெய்து செய்தனர்.*
மேலும், இது சம்பந்தமாக சாப்டூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரிகள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து புகையிலைப் பொருட்கள் 1872கிலோ இதன் மதிப்பு ( ரூபாய் 30 லட்சம்) மற்றும் இரண்டு கார் மற்றும் ஒரு சரக்கு வாகனம் உட்பட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிறப்பாக செயலாற்றிய தனிப்படையினரை காவல் உயரதிகாரிகள் தங்களது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்கள்.
மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா , புகையிலை விற்பனை ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகையிலைக் பொருட்களை பயன்படுத்துவதால் சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகளை தடுக்க ஏதுவாக அதுகுறித்த தகவல்களை உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.வீ. பாஸ்கரன் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.