Police Department News

அசத்தலான 60 வசதிகளுடன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்த முதல்வர்… அப்படி என்னதான் அதில் இருக்கு?

அசத்தலான 60 வசதிகளுடன் காவல் உதவி செயலியை அறிமுகம் செய்த முதல்வர்… அப்படி என்னதான் அதில் இருக்கு?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்திலிருந்து காவல் உதவி மொபைல் செயலியை தொடங்கி வைத்து இருக்கிறார்.

திமுக ஆட்சிக்கு வந்ததிலிருந்து முதலமைச்சரின் கட்டுப்பாட்டின் கீழ் வரும் காவல்துறை நிர்வாக ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் மேம்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த அடிப்படையில் தற்போது முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டு இருக்கும் காவல் உதவி செயலியில் 60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன.

அவசரகால செல்போன் அழைப்பு வசதி (டையல் 100/101/112)
பொதுமக்கள் தங்களின் செல்போன் வாயிலாக புகார்களை நேரடியாக தெரிவிக்க டையல் 100 என்ற செயலி காவல் உதவி செயலியோடு ஒருங்கிணைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காவல்துறையை தொடர்புகொள்ளும்போது அந்த எண்ணின் உரிமையாளர் யார், எங்கிருந்து பேசுகிறார் என்பதை உடனே அறிந்து அவருக்கான உதவியை காவல்துறையால் வழங்க முடியும்.

செல்போன் வீடியோ மூலம் புகார்
பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள் உள்ளிட்டோர் ஆபத்தில் சிக்கி இருக்கும்போது தனது செல்போனில் அங்குள்ள சூழலை வீடியோவாக பதிவு செய்து அதை இந்த செயலி மூலம் பதிவேற்றம் செய்து தங்களின் நிலையை காவல்துறைக்கு தெரியப்படுத்தலாம்.

அதேபோல், இந்த செயலில் பொதுமக்கள், பெண்கள் ‘அவசரம்’ என்ற சிவப்பு நிற பட்டனை அழுத்தினால், அவரது விபரம், அவர் இருக்கும் இருப்பிட விபரம், வீடியோ என அனைத்தும் கட்டுப்பாட்டு அறைக்கு சென்றுவிடும். அதன்மூலம் அவருக்கு அவசர உதவியை வழங்கிட இயலும்.

.இருப்பிட பரிமாற்ற வசதி
பொதுமக்கள் பயணத்தில் இருக்கும்போது, தாங்கள் ஏதேனும் ஆபத்தில் இருந்தாலோ, காவல்துறையிடம் அவசர உதவி தேவைப்பட்டாலோ வாட்ஸ் அப், கூகுள் மேப் மூலமாக தங்களின் உறவினர் அல்லது நண்பருக்கு இருப்பிடத்தை பகிர்ந்து அதன் மூலம் ஆபத்தில் இருப்பவர் இருக்கும் இடத்துக்கு போலீசார் விரைந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டு இருக்கிறது.

60-க்கும் மேற்பட்ட சிறப்பம்சங்கள்
இதேபோல் காவல் நிலையத்தின் இருப்பிடத்தை அறியும் வசதி, போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் தொலைப்பேசி எண்களை தெரிந்துகொள்ளும் வசதி, ஆன்லைன் பண மோசடி குறித்து புகார் தெரிவிக்கும் வசதி, மற்ற புகார்களை அளிக்கும் வசதி, அவசர கால எச்சரிக்கைகள், தகவல்களைபெறும் வசதி, வாகன விபரங்களை அறிந்துகொள்ளும் வசதி போன்றவை இந்த செயலில் இடம்பெற்று உள்ளன.

கூகுள் ப்ளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்திடலாம்
அதேபோல் காவல்துறைக்கு செலுத்த வேண்டிய அபராதங்களையும் இந்த செயலியின் மூலமாக பொதுமக்கள் செலுத்தலாம். தனிநபர் சரிபார்ப்பு சேவை, காணாமல் போன ஆவணங்கள் குறித்து புகார், முதல் தகவல் அறிக்கை (FIR) விபரங்களையும் இச்செயலி மூலமாக பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். கூகுள் பிளே ஸ்டோரில் Kaaval Uthavi என ஆங்கிலத்தில் டைப் செய்து தேடினால் இந்த செயலியை பதிவிறக்க செய்து பயன்படுத்தலாம்.

அல்லது கீழ்காணும் லிங்கை கிளிக் செய்தும் பதிவிறக்கம் செய்யலாம் – https://play.google.com/store/apps/details?id=com.amtexsystems.kaavaluthavi

Leave a Reply

Your email address will not be published.