Police Department News

மோட்டார்சைக்கிளில் ‘லிப்ட்’ கேட்டு சென்று திருநங்கைபோல் வேடமணிந்து போலீஸ்காரரிடம் நகை பறித்தவர் கைது

பூந்தமல்லி, 

விருத்தாசலத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி (வயது 28). ஆயுதப்படை போலீஸ்காரரான இவர், கிண்டியில் வாடகை வீட்டில் தங்கி, மதுரவாயலில் உள்ள ஒரு அமைச்சரின் வீட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். சொந்த ஊருக்கு சென்றுவிட்டு 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி வந்தார்.

மதுரவாயல் பைபாஸ் சர்வீஸ் சாலையில் வந்தபோது அவரிடம் திருநங்கை ஒருவர் ‘லிப்ட்’ கேட்டு ஏறி மதுரவாயலில் வந்து இறங்கினார். அப்போது அவர், நைசாக போலீஸ்காரர் சத்தியமூர்த்தி கழுத்தில் கிடந்த 1 பவுன் நகையை பறித்துச்சென்று விட்டார். இதுபற்றி மதுரவாயல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பாக திருவேற்காட்டை சேர்ந்த முருகன் (45) என்பவரை கைது செய்து விசாரித்தபோது, போலீஸ்காரர் சத்தியமூர்த்தியிடம் நகையை பறித்ததை ஒப்புக்கொண்டார். மேலும் விசாரணையில் அவர், திருநங்கை இல்லை என்பதும் தெரியவந்தது. பகலில் பூ வியாபாரம் செய்து வரும் அவர், இரவு நேரங்களில் மேக்கப்போட்டு கொண்டு புடவை அணிந்து, தலையில் பெண்களை போல் நீளமான முடியை வைத்து கொண்டு திருநங்கை போல் நடித்து இதுபோல் வருபவர்களிடம் ‘லிப்ட்’ கேட்டு சென்று நகை பறித்து வந்தார்.

வழக்கம்போல் போலீஸ் என தெரியாமல் ‘லிப்ட்’ கேட்டு வந்து சத்தியமூர்த்தியிடமும் நகை பறித்தது தெரிந்தது. குடும்ப சூழ்நிலை காரணமாக இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டதும் தெரியவந்தது.

Leave a Reply

Your email address will not be published.