ஒழுக்கம் என்பது மாணவ சமுதாயத்தில் இருந்துதான் ஆரம்பமாகிறது.
காரியாபட்டி அருகே பாம்பாட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு சுய ஒழுக்கம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திய சார்பு ஆய்வாளர்
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே பாம்பாட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் காவல்துறை சார்பில் மாணவ, மாணவிகளுக்கு குற்றங்களில் இருந்து எவ்வாறு விடுபட வேண்டும் என்பது பற்றியும், பாலியல் குற்றம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. குருசாமி தலைமை தாங்கினார்.
இதில் காரியாபட்டி சார்பு ஆய்வாளர் திரு.அசோக்குமார் அவர்கள் கலந்து கொண்டு பள்ளி மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும், சிறிய சிறிய தவறு செய்யும் போது படிப்பு வீணாகிவிடும் என்றும்.
மாணவர்கள் செய்யும் சிறிய தவறுகளுக்கு காவல்துறையால் வழக்குபதிவு செய்யும் சூழ்நிலை ஏற்பட்டால் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும்.
இதனால் அரசு வேலை கிடைப்பதிலும் பாதிப்பு ஏற்பட்டு விடும். மாணவர்கள் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்தினால் அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்.
செல்போன் பார்ப்பதை மாணவர்கள் தவிர்க்க வேண்டும், செல்போன் மாணவர்களை சீரழிக்கும் வேலையை செய்து வருகிறது என்றும் பேருந்தில் படிகளில் தொங்கியபடி பயணம் செய்வதன் ஆபத்து குறித்தும் , போக்சோ சட்டம் யார் மீது பாயும், குழந்தை திருமணம் செய்து வைத்தால் யாருக்கு என்ன தண்டனைகள், சமூக ஊடகங்கள் பயன்பாட்டு முறை, போதைப்பொருள் பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்தும் அவர் அறிவுரை கூறினார்.
மேலும் சைபர் கிரைம் அவசர உதவி எண் மற்றும் காவலன் உதவி செயலியின் செயல்பாடு குறித்தும் எடுத்துரைத்தார்.
இதில் காரியாபட்டி குழந்தைகள் பாதுகாப்பு காவலர் திரு.பார்வதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அவ்வப்போது காவல் துறை மாணவர்களுடன் கலந்துரையாடல் மற்றும் நல்லொழுக்கம் சம்மந்தமான விசயம் எடுத்துக்காட்டுகளை கூறிவரும் திரு.அசோக்குமார் அவர்களின் பணிகள் மாணவர்களின் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்திவருவது பாராட்டுதலுக்கு உறியதாகும்.