வாகன தணிக்கையில் பிடிப்பட்ட செயின் பறிப்பு குற்றவாளிகள்
தாம்பரம் மாநகர காவல் ஆணையாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி தாம்பரம் மாநகர காவல் நிலைய பகுதிகளில் தொடர்ந்து செயின் பிரிப்பு சமூக ஈடுபடும் குற்றவாளிகளை பிடிக்க கொடுக்கப்பட்ட அறிவுரைகளின் படி பள்ளிக்கரணை காவல் மாவட்டம் காவல்துறை ஆணையாளர் (ச/ஒ) அவர்களின் வழிகாட்டுதலின்படி கேளம்பாக்கம் காவல் நிலைய பொறுப்பு குற்றப்பிரிவு ஆய்வாளர் G. வெங்கடேசன் மற்றும் T-19 கேளம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவு உதவி ஆய்வாளர்கள் புகழேந்தி மற்றும் சுகுமார் ஆகியோர்களின் தலைமையில் இரண்டு குழுக்களாக தனிப்படை காவலர்களின் மூலம் கண்காணிக்கப்பட்டதில் செயின் பறிப்பு குற்ற சம்பவங்கள் நடைபெறும் இடங்களில் உள்ள CCTV கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க நபர்கள் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
27.09.2024 ஆம் தேதி 15.30 மணி அளவில் படூர் விஜய் வித்யாஷ்ரம் பகுதியில் பள்ளி முடிந்து தனது குழந்தைகளை அழைத்துச் சென்று கொண்டிருந்த ஒரு பெண்மணி இடம் அவரது பின்னால் வந்த எதிரிகள் அவரை வழிமறித்து அவர் அணிந்திருந்த தங்கத் தாலி சரடு மற்றும் தங்கச் செயலை பறித்துக் கொண்டு சென்று விட்டதாக கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு எதிரியை தேடி வந்த நிலையில் இன்று 02.10.2024 ஆம் தேதி காலை புதுப்பாக்கம் ஆஞ்சநேயர் கோயில் பஸ் நிறுத்தம் அருகில் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தபோது இரு சக்கர வாகனத்தில் வந்த நபர்களை பிடித்து விசாரிக்க தன் பெயர் 1.ஜெய்சன் மேத்யூ ஆ/வ 31 த/பெ ஜான் ரவி எண் 22 கேக் மாம் குவார்டர்ஸ் . பெங்களூர் 2,மணிகண்டா ஆ/வ 31 த/பெ குப்புசாமி எண் 11 கென்சின்டன் ரோடு. உல்சூர் ஏரி பெங்களூர் வடக்கு. கர்நாடகா என்றும் தாங்கள் கர்நாடக மாநிலம் பெங்களூரை சேர்ந்தவர்கள் என்றும் பெங்களூரில் இருந்து மது வாங்கிக் கொண்டு சென்னைக்கு வந்து ஆங்காங்கே உள்ள மதுபான கூடங்களில் மது குடித்து நன்றாக சாப்பிட்டு விட்டு ரூம் எடுத்து தங்கி ஜாலியாக செலவு செய்து விட்டு மீண்டும் பெங்களூர் சென்று வருவது வழக்கமாக கொண்டிருந்தார்கள் என்றும். கடந்த 27.09.2024 ஆம் தேதி மது அருந்திவிட்டு படூர் பகுதியில் சென்ற பெண்மணி இடமிருந்து 8 சவரன் தங்க நகைகளை பறித்தோம் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.
எதிரிகளான ஜெய்சன் மேத்யூ மற்றும் மணிகண்டா ஆகியோர்கள் தாம்பரம் மாநகர காவல் பகுதியில் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளது தெரிய வருகிறது. எனவேT-19 கேளம்பாக்கம் காவல் நிலைய குற்றப்பிரிவில் செயின் பறிப்பு வழக்கில் மேற்படி நபர்களை கைது செய்து அவரிடமிருந்து 7 சவரன் தங்க நகைகளை கைப்பற்றப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டுள்ளார்கள்.