Police Recruitment

போக்சோ மற்றும் மோசடி வழக்கில் 4 குற்றவாளிகள் கைது தல்லாகுளம் போலிசாரின் அதிரடி நடவடிக்கை

போக்சோ மற்றும் மோசடி வழக்கில் 4 குற்றவாளிகள் கைது தல்லாகுளம் போலிசாரின் அதிரடி நடவடிக்கை

கடந்த 5 ம் தேதி மதுரை லெட்சுமிபுரம் 7 வது தெருவை சேர்ந்த செல்வராஜ் மனைவி இந்துமதி என்பவர் தனது மைனர் பெண்ணை காதலிப்பதாக கூறி ஏமாற்றி பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து வீட்டிலிருந்த 10 பவுன் தங்கச் செயினை எடுத்து வர சொல்லி ஏமாற்றிய மதுரை கோ.புதூர் சபீர் அஹமது மகன் பயாஸ்கான் என்பவர் மீது கொடுத்த புகாரின் பேரில் தல்லாகுளம் காவல் நிலைய குற்ற எண் 488/2022, பிரிவு 7,8, of pocso act and IPC. 420 ன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மேற்படி வழக்கு சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுக்க மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. T.செந்தில் குமார் IPS அவர்களின் உத்தரவின் பேரில் துணை ஆணையர் வடக்கு திரு.N.மோகன்ராஜ் அவர்களின் மேற்பார்வையில் தல்லாகுளம் உதவி ஆணையர் பொறுப்பு திரு.சூரக்குமார் அவர்களின் தலைமையில் தல்லாகுளம் காவல் ஆய்வாளர் திரு.V. பாலமுருகன் உதவி ஆய்வாளர்.திரு. அதிகுந்தகண்ணன் முதல் நிலை காவலர்கள் திரு. ரஞ்சித் திரு. கார்த்திக் ஆகியோர்கள் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

மேற்படி தனிப்படை எடுத்த துரித நடவடிக்கையால் வழக்கில் சம்பந்தப்பட்ட பயாஸ்கான் என்பவரை கடந்த 5 ம் தேதி அன்று கைது செய்து விசாரிக்க பயாஸ்கான் என்பவர் மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட மைனர் பெண்ணை 2 மாத காலமாக இன்ஸ்டாகிராம் மூலமாக பழகி காதலித்து பாலியல் ரீதியாக தொந்தரவு செய்து ஏமாற்றி மேற்படி மைனர் பெண்ணை ஆசை வார்த்தை கூறி வீட்டிலிருந்த 10 பவுன் தங்க நகையை யாருக்கும் தெரியாமல் எடுத்து வர சொல்லி மேற்படி 10 பவுன் நகையை தனது நண்பர்கள் மதுரை கோ.புதூரை சேர்ந்த முருகன் மகன் சதீஷ் மற்றும் சேகர் மகன் சரவணக்குமார் ஆகியோர்கள் மூலம் சரவணக்குமாரின் அம்மா முத்துலட்சுமி என்பவர் மதுரை கோ.புதூர் முத்தூட் பைனாசில் மேற்படி 10 பவுன் நகையை அடமானம் வைத்து பணம் 2,70,000/- பெற்று அதிலிருந்து பயாஸ்கானுக்கு 1,70,000 மும் சரவணக்குமாருக்கு 30,000 மும் முத்துலட்சுமி 50,000-மும் பங்கு போட்டுக்கொண்டு கூட்டு சதி செய்து மைனர் பெண்ணை ஏமாற்றியுள்ளனர் என தெரிய வந்தது.

உடனடியாக வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற எதிரிகளான சதீஷ் சரவணக்குமார் முத்துலட்சுமி ஆகியோர்களை கைது செய்து ஏமாற்றப்பட்ட ரூபாய் 4,00000 மாதிப்புள்ள 10 பவுன் நகையை மீட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகள் அனைவரையும் நீதி மன்ற காவலுக்கு அனுப்பப்பட்டனர்

இந்த வழக்கில் துரிதமாக செயல்பட்டு வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரிகளை விரைவில் கைது செய்து 4 லட்சம் மதிப்புள்ள 10 பவுன் தங்க நகையை மீட்ட தனிப்படையை மதுரை மாநகர் காவல் ஆணையர் திருT. செந்தில்குமார் IPS அவர்கள் மற்றும் துணை ஆணையர் வடக்கு. திரு.N. மோகன்ராஜ் TPS அவர்கள் பாராட்டினார்கள்

Leave a Reply

Your email address will not be published.