பாலக்கோடு .அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே பாலக்கோடு காவல்துறை சார்பாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு
ஊர்வலம் தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு காவல் ஆய்வாளர் தவமணி அவர்கள். காவல் ஆய்வாளர் கவிதா அவர்களின் தலைமையில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தலைக்கவசம் அணிதல் சாலை விதிகளை பின்பற்றுதல் குழந்தை திருமணம் தடுத்தல் விழிப்புணர்வு போதை பழக்கத்திற்கு ஆளாகாதே ஆகிய பதாகையை ஏந்தி பாலக்கோடு முக்கிய சாலையிலான எம் ஜி ரோடு பஸ் நிலையம் வழியாக ஊர்வலமாக சென்றனர். இதில் பாலக்கோடு பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட மாணவிகள் விழிப்புணர்வு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். இந்த ஊர்வலத்தை பாலக்கோடு காவல்துறையினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
‘தக்ஸ் ஆஃப் ஹிந்தோஸ்தான்’ படத்திற்கு பிறகு அமீர்கான் நடிக்கும் படம் ‘லால் சிங் சட்டா’.இது 1994ஆம் ஆண்டு வெளியான ஹாலிவுட் படமான ‘ஃபாரஸ்ட் க்ரம்’ படத்தின் ரீமேக் ஆகும். அமெரிக்க அரசியல் வரலாற்றை ஒட்டியதுபோன்று நடைபெற்ற இந்த படம், பல விருதுகளையும், நல்ல வசூலையும் பெற்றது. இந்நிலையில் இந்த படத்தை இந்தியாவிற்கு ஏற்றார்போல கதையில் திருத்தம் செய்து எடுக்க திட்டமிட்டார். அடுத்த வருட டிசம்பர் மாதம் 20ஆம் தேதி படம் ரிலீஸ் செய்யப்பட இருப்பதாக தெரிவித்து அதனுடன் […]
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திக்குளம் உட்கோட்டம், சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்த 4 பேர் கைது – 459 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் சங்கரலிங்கபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்று (23.05.2021) எஸ்.ஐ. திரு. ஹென்சன் பால்ராஜ் தலைமையிலான போலீசார் என். வேடப்பட்டி மற்றும் நாகலாபுரம் சந்தைப் பேட்டை ஆகிய பகுதிகளுக்கு ரோந்து சென்ற போது வேடப்பட்டியைச் சோந்த சண்முகதுரை மகன் மோகன்ராஜ் (36), உத்தண்டு மகன் […]
சிறுமியிடம் சீண்டல்… முதியவரை அதிரடியாக கைது செய்த காவல்துறை! கோவையைச் சேர்ந்தவர் திருஞானம் (60). இவர், கடந்த திங்கள் கிழமை (ஜன. 27) நாமக்கல் மாவட்டம் ஏஸ் பேட்டையில் உள்ள உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். அன்று மாலையில், துக்க வீட்டிற்கு வெளியே அமர்ந்திருந்தார்.அதே பகுதியைச் சேர்ந்த 3 வயதே ஆன சிறுமி அங்கு தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அந்தக் குழந்தையை அழைத்த திருஞானம், சிறுமிக்கு விளையாட்டு காட்டுவதுபோல் பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். மிரண்டுபோன […]