Police Department News

உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

உணவில் மயக்க மருந்து கலந்து கொடுத்து வீட்டிலிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை திருடிச் சென்ற நபரை விரைந்து கைது செய்த காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து பாராட்டினார்.

சென்னை, கீழ்ப்பாக்கத்தில் சீனிவாசலு, வ/54, த/பெ.வேணுகோபால் என்பவர் வீட்டில் நேபாளத்தை சேர்ந்த சுஜன், வ/24, த/பெ ரமேஷ், என்பவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வாட்ச்மேன் வேலை மற்றும் சமையல் வேலை செய்து பின்பு வேலையை விட்டுவிட்டு நேபாளத்திற்கு சென்றுவிட்டார். பின்னர் சுஜன் கடந்த 3 மாதத்திற்கு முன்பு சென்னைக்கு வந்து, நுங்கம்பாக்கத்திலுள்ள சோபா மற்றும் பெட் விற்பனை செய்யும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் சுஜன் கடந்த 18.11.2019 அன்று இரவு சுமார் 07.30 மணிக்கு சீனிவாசலு வீட்டிற்கு சென்று குடும்பத்துடன் பேசிக்கொண்டு இருந்துவிட்டு, சிறிது நேரம் கழித்து இன்று இரவு உணவு தயார் செய்து தருகிறேன் என்று கூறி உணவில் மயக்க மருந்து கலந்துக் கொடுத்துவிட்டு வீட்டிலிருந்து 15 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 35,000/-ஐ திருடி சென்றுள்ளார்.

அதன்பேரில், சீனிவாசலு 19.11.2019 அன்று G-3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததன்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை செய்ததில், எதிரி சுஜன் அன்றைய தினம் இரவு இரயில் மூலம் நேபாளத்திற்கு தப்பி செல்ல உள்ளது தெரியவந்தது. அதன்பேரில், தனிப்படையினர் சென்டிரல் இரயில் நிலையத்தில் சாதாரண உடையில் தீவிரமாக கண்காணித்தில், குற்றவாளி சுஜன், வ/24, த/பெ ரமேஷ், பர்வித் கிராமம், பாகி பரசூர் மாவட்டம், நேபாளம் என்பவரை 19.11.2019 இரவு சுமார் 11.30 மணிக்கு கைது செய்தனர். அவரிடமிருந்து 15 ½ சவரன் தங்க நகைகள் மற்றும் பணம் ரூபாய் 20,000/- பறிமுதல் செய்யப்பட்டது.

பணியின்போது சிறப்பாக செயல்பட்டு, சென்னையை விட்டு தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளியை கைது செய்த G-3 கீழ்ப்பாக்கம் காவல் நிலையத்தைச் சேர்ந்த .P.சரவணன், த.கா.26945, S.K.பென் ஆர்வின் சாம், மு.நி.கா.27873 S.ரெஜின், மு.நி.கா.29043 ஆகியோரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் முனைவர்.திரு.அ.கா.விசுவநாதன், இ.கா.ப., அவர்கள் இன்று 21.11.2019 நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கினார்.

ச.அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published.