76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு…
76 டிஎஸ்பிக்கள் அதிரடி மாற்றம் … டிஜிபி சைலேந்திரபாபு திடீர் உத்தரவு…
தமிழகத்தில் 76 காவல்துறை டிஎஸ்பிக்களை பணியிடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு அடிக்கடி மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தற்போது காவல்துறையில் 76 டிஎஸ்பிகளை இடமாற்றம் செய்து தமிழக காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
அதில் ஆருத்ரா கோல்ட் டிரேடிங் வழக்கு தொடர்பான பொருளாதார குற்றப்பிரிவு விசாரணையில் இருந்து விடுவிக்கப்பட்டு , பின்னர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்ட மூன்று டி.எஸ்பிக்களான கண்ணன் – மணிமுத்தாறு தமிழ்நாடு சிறப்பு காவல் படை உதவி கமாண்டண்ட் , சம்பத் – ராமநாதபுரம் மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, சுரேஷ் – ராமநாதபுரம் சரக போலீஸ் பயிற்சி மையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதேபோல் , தாம்பரம் காவல் ஆணையராக பணியாற்றிய ரவி அவர்கள் ஓய்வு பெற்றதை அடுத்து, ஆவடி காவல் ஆணையரே கூடுதல் பொறுப்பாக தாம்பரம் சரகத்தையும் கண்காணித்து வந்தார். இந்நிலையில் தற்போது மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனராக ரித்து நியமனம் செய்யப்பட்டுள்ளார். மொத்தமாக தமிழக காவல்துறையில் 76 டி.எஸ்பிக்களை அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளர். இந்த பணியிடமாற்றம் செய்யப்பட்ட டிஎஸ்பிகளில் பெரும்பாலானோர் காத்திருப்போர் பட்டியலில் இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.