Police Department News

மதுரை திருமங்கலம் பகுதியில்42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை திருமங்கலம் பகுதியில்
42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்

மதுரை அருகே திருமங்கலத்தில் 42 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடை உரிமையாளர் யேசுதாசை கைது செய்தனர்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் மார்க்கெட் பகுதியில் பலசரக்கு கடை வைத்திருப்பவர் யேசுதாஸ்(வயது 53). இவர் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பதாக புகார் எழுந்தது.

இதனைத் தொடர்ந்து திருமங்கலம் நகர் போலீசார் மார்க்கெட் பகுதியில் உள்ள அவரது கடையில் சோதனை செய்தனர். அப்போது அரசால் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் 42.5 கிலோ இருந்தது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்து 42.5 கிலோ புகையிலைப் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர் யேசுதாசை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.