
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டி.ஜி.பி., அலுவலகத்தில் உங்கள் துறையில் முதலமைச்சர் திட்டத்தின் கீழ் போலீசாரிடம் மனுக்கள் வாங்கினார்
சென்னை மெரினாவில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தந்திருந்தார். அங்கு முதல்வருக்கு காவல் துறையினர் சார்பில் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
பின்னர், டிஜிபி வளாகத்தில் மகிழம் மரக்கன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் நட்டு வைத்தார்.
மேலும், “உங்கள் துறையில் முதல்வரின்” திட்டத்தின் கீழ் காவல்துறையினரிடம் கோரிக்கை மனுக்களையும் முதல்வர் ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.
அவர்களின் குறைகளை கேட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
இதனை தொடர்ந்து காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பார்வையாளர் பதிவேட்டில் அவர் குறிப்பு எழுதி கையெப்பம் இட்டார்
இந்த நிகழ்வின் போது உள்துறை செயலாளர் பணீந்திர ரெட்டி டிஜிபி சைலேந்திரபாபு சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர்ஜிவால் கூடுதல் டிஜிபி தாமரைகண்ணன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.
