Police Department News

பைனான்ஸ் அதிபரின் மகனை 1 கோடி கேட்டு கடத்திய கும்பல் 15 மணி நேரத்தில் மீட்ட பாலக்கோடு காவல்துறையினர் ‌

பைனான்ஸ் அதிபரின் மகனை 1 கோடி கேட்டு கடத்திய கும்பல் 15 மணி நேரத்தில் மீட்ட பாலக்கோடு காவல்துறையினர்

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மேல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். இவருக்கு மனைவி ஒரு மகன் ஒரு மகள் உள்ளனர். பிளஸ் 1 முடித்துள்ள மகன் ஷியாம்சுந்தர் (17) பாலிடெக்னிக் படிப்பதற்காக குமாரபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 20 தேதி ஷியாம்சுந்தர் பாலக்கோடு கடைவீதிக்குச் சென்றார். அன்று மாலை சிவகுமாருக்கு செல்போன் அழைப்பு ஒன்று வந்தது மறுமுனையில் பேசிய மர்ம நபர் உங்கள் மகனை கடத்தி வைத்துள்ளோம் 1கோடி கொடுத்தால் தான் விடுவிப்போம் என்ன மிரட்டி உள்ளனர். இதனால் அதிர்ச்சிஅடைந்த சிவகுமார் அவ்வளவு பணம் என்னிடம் இல்லை 10 லட்சம் தருகின்றேன் என கூறியுன்னார் அதற்கு கடத்தல் கும்பல் ஒப்புக்கொண்டனர். இது தொடர்பாக பாலக்கோடு காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் சிவக்குமார் புகார் அளித்தார். பாலக்கோடு காவல் துறையினர் தீவிர விசாரணையில் இறங்கினர். பாலக்கோடு காவல் துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டனர். சிவகுமாருக்கு வந்த செல்போன் அழைப்பின் நம்பர் கடைவீதி பகுதிகளில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகள் செல்போன் சிக்னல் உள்ளிட்டவற்றை வைத்து தீவிர விசாரணையில் இறங்கினர். இதனிடையே கடத்தல் கும்பல் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பாலக்கோடு துணை கண்காணிப்பாளர் சிந்து தலைமையிலான தனிப்படையினர். சூளகிரி விருந்தினர். நேற்று முன்தினம் இரவு அங்கு காரில் சென்று கொண்டிருந்த கடத்தல் கும்பலை காவல்துறையினர் மடக்கி பிடித்தனர். அவர்களிடமிருந்து ஷியாம்சுந்தர்ரை மீட்ட காவல்துறையினர் கடத்தல் கும்பலை சேர்ந்த 7 பேரையும் பாலக்கோடு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். புகார் அளித்து 15 மணி நேரத்தில் காவல் துறையினர் துரிதமாக செயல்பட்டு மாணவனை மீட்டு கடத்தல் கும்பலை பிடித்துள்ளனர். இதுகுறித்து தனிப்படை காவல்துறை கூறுகையில் பைனான்ஸ் அதிபர் மகனின் கடத்தலில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே மல்லாபுரத்தைச் சேர்ந்த அருணகிரி மகன் அருண்குமார் (33) பாலக்கோடு மேல் தெரு முருகேசன் மகன் சதீஷ்குமார் (29) கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியைச் சேர்ந்த முரளியய்யா மகன் முரளி (32) ஓசூர் அலேசீபம் பகுதியைச் சேர்ந்த வெங்கிடசாமி மகன் முருகேசன் (38) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கூலி தொழிலாளர்களான இவர்கள் இடையே வேலைக்கு சென்ற இடத்தில் பழக்கம் ஏற்பட்டுள்ளது. போதிய வருமானம் கிடைக்காததால் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க முடிவு செய்துள்ளனர். இந்தநிலையில் கடை தெருவிற்கு வரும் ஷியாம்சுந்தரிடம் அதிக பணம் புழங்குவதை‌ கண்டு அவரை கடத்தி பணம் பறிக்க முடிவு செய்துள்ளனர். அதன்படி அவரை கடத்திச் சென்று பெற்றோரிடம் பணம் கேட்டு மிரட்டி உள்ளனர். கைது செய்யப்பட்ட 7 பேரும் தர்மபுரி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.