Police Department News

டி.எஸ்.பி., பதவி உயர்வு கிடைக்காமல்180 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தவிப்பு

டி.எஸ்.பி., பதவி உயர்வு கிடைக்காமல்180 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் தவிப்பு

தமிழக காவல் துறைக்கு சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் நேரடி போலீஸ் எஸ்.ஐ.க்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
அவர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்ஸ்பெக்டர் பதவி உயர்வும் அடுத்த 10 ஆண்டுகளில் டி.எஸ்.பி. பதவி உயர்வும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 1977ல் நேரடி தேர்வு மூலம் 750 பேர் போலீஸ் எஸ்.ஐ.யாக தேர்வு செய்யப்பட்டனர். அதில் 20 ஆண்டுகளுக்கு பிறகு 570 பேருக்கு மட்டும் டி.எஸ்.பி. பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
மீதமுள்ள 180 பேருக்கு 24 ஆண்டு பணி முடிந்த நிலையில் டி.எஸ்.பி. பதவி உயர்வு வழங்கப்பட வில்லை. இதனால் அவர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கூறியதாவது: போலீஸ் இன்ஸ்பெக்டர் பதவி உயர்வே 10 ஆண்டுகளில் சரியாக கிடைப்பது இல்லை. அதே போல் டி.எஸ்.பி. பதவி உயர்வும் தாமதமாகிறது.
குரூப் – 1 தேர்வு மூலம் நேரடியாக டி.எஸ்.பி. பணிக்கு தேர்வு பெற்றாலும் எங்களுக்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் பதவி உயர்வு வழங்க வேண்டும். இந்நிலையில் கடந்த 2020ல் 81 பேர் குரூப்-1 தேர்வு மூலம் நேரடியாக டி.எஸ்.பி. பதவிக்கு தேர்வு செய்யப்பட்டு பணி அமர்த்தப்பட்டனர். இதனால் காலி பணியிடங்கள் இல்லை என உயர் அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆட்சிக் காலத்தில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. அந்த மாவட்டங்களில் சட்டம் – ஒழுங்கு பிரிவை தவிர மற்ற பல்வேறு பிரிவுகளில் டி.எஸ்.பி. பணியிடங்கள் காலியாக உள்ளன.அந்த இடத்தில் 180 போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு பதவி உயர்வு வழங்கி பணியமர்த்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published.