Police Department News

திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக குழுமத்தில் மினி மாரத்தான் ஓட்டம் – 15 கிலோமீட்டர் ஓடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

திருச்சி எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக குழுமத்தில் மினி மாரத்தான் ஓட்டம் – 15 கிலோமீட்டர் ஓடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

உலக இருதய தினத்தை முன்னிட்டு திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழக குழும மாணவர்கள் மாணவிகள் (பொறியியல் கல்லூரி மருத்துவக் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி) சேர்ந்த மாணவ மாணவியர்கள் இருதயம் சம்பந்தப்பட்ட நோய்களுக்கானவிழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதில் 5 கிலோ மீட்டர் தூரம் மாணவிகளும், மாணவர்கள் 15 கிலோமீட்டர் தூரம் மினி மாராத்தான் விழிப்புணர்வு ஓட்டத்தில் பங்கேற்றனர். விழிப்புணர்வு ஓட்டத்தை திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜித் குமார் துவக்கி வைத்து அவரும் 15 கிலோமீட்டர் தூரம் ஓடினார். மாணவிகள் திருச்சி எஸ் ஆர் எம் பல்கலைக்கழக வளாகத்திற்குள் 5 கிலோமீட்டர் தூரம் ஓடினர்.

15 கிலோமீட்டர் தூரத்தை ஓடி முடித்த திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சுஜீத் குமார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார். அப்போது பேசிய அவர்… ஒவ்வொருவரும் இது போன்ற விழிப்புணர்வுக்கான மாரத்தான் ஓட்டங்களில் பங்கேற்க வேண்டும். நானும் இதில் பங்கேற்று முடித்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். வெற்றி பெறுவதை விட பங்கேற்ற அனைவருக்கும் பாராட்டுகளை தெரிவித்தார்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு ஒரு லட்ச ரூபாய் பரிசு தொகையும் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் திருச்சி எஸ்.ஆர்.எம், ராமாவரம் பல்கலைக்கழக குழும தலைவர் மருத்துவர் சிவக்குமார் உள்ளிட்ட முதல்வர்கள், மருத்துவர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக நடைபெற்ற மாணவ மாணவிகளுக்கான மினி மாரத்தான் ஓட்டத்தில் நூற்றுக்கணக்கான பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published.