Police Department News

பாலக்கோடு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாகனங்கள் சிறைப்பிடிப்பு- பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு*

பாலக்கோடு அருகே அனுமதியின்றி மணல் கடத்திய வாகனங்கள் சிறைப்பிடிப்பு- பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்ட கிராம மக்களால் பரபரப்பு*

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே சீங்காடு கிராம பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழை பொழிவால் கிராமத்தை ஒட்டி உள்ள காப்புக்காடு வனப் பகுதிகளில் வழிந்தோடும் நீரோடை மற்றும் ஆற்றுப்பகுதிகளில் சட்டவிரோதமாக அரசு அனுமதியின்றி இன்று அதிகாலை 5 -டிராக்டர் 1-ஜேசிபி இயந்திரம் மூலமாக மணல் கடத்திய நிலையில் 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஒன்றிணைந்து மணல் கடத்திய வாகனங்களை சிறைபிடித்து பந்தல் அமைத்து தர்ணாவில் ஈடுபட்டனர்.
இதையடுத்து தகவல் அறிந்த காவல்துறை,வருவாய்த்துறை துறை, வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

பொதுமக்கள் தெரிவிக்கையில்

காப்புகாடு பகுதியில் ஆடு, மாடு மேச்சலுக்கு செல்லக்கூடாது, மணல், மரங்கள் உள்ளிட்ட எந்த பொருள் திருட்டு நடைபெற்றாலும் திட்டகிராம மக்களே பொறுப்பேற்க வேண்டும் என்றும், காப்புகாட்டில் அமைந்துள்ள ஈஸ்வரன் கோவில், மாரியம்மன் கோவிலுக்கு காலங்காலமாக வழிபட்டு வரும் பொதுமக்கள் தற்போது செல்லக்கூடாது என்றும் கோவிலுக்கு செல்லும் பாதையை சேதப்படுத்தி வரும் வனத்துறையினரை கண்டித்தும் மணல் திருட்டை கட்டுப்படுத்தவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாலக்கோடு வட்டாட்சியர்,காவல்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து நீண்ட நேர போரட்டத்திற்கு பிறகு பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் மணல் கடத்தலில் ஈடுபட்ட ஐந்து டிராக்டர்கள் மற்றும் ஒரு ஜேசிபியை பறிமுதல் செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published.