கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் காணாமல் போன கைக்குழந்தையை 3 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோரிடம் ஒப்படைத்த கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பேரிகை செல்ல வேண்டி
30.10.2022 ஆம் தேதி விடியற்காலை 04.00 மணிக்கு ஓசூர் நகர பேருந்து நிலையத்தில் உறங்கிக் கொண்டிருந்தபோது ராம்கேவால்-அனிதா தம்பதியரின் 6 மாத பெண் குழந்தையை அடையாளம் தெரியாத நபர் கடத்திச் சென்று விட்டதாக ஓசூர் நகர காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் காவல் கண்காணிப்பாளர் திரு. சரோஜ்குமார் தாகூர் இ.கா.ப., அவர்கள், கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. விவேகானந்தன் அவர்கள், திரு. அரவிந்த் இ.கா.ப., அவர்கள் மற்றும் ஓசூர் நகர காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்தில் விசாரணை செய்து ஓசூர் நகரத்தின் அனைத்து கேமராக்களை ஆய்வு செய்து குழந்தையை கடத்திச் சென்ற 3 மணி நேரத்தில் குழந்தையை கண்டுபிடித்து பெற்றோரிடம் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் ஒப்படைத்தார். மேலும் குழந்தையை கடத்திச் சென்ற நபரை காவல்துறையினர் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
திருப்பூர் மாநகர காவல் துறைக்கு 5 ஆயிரம் முக கவசம் வழங்கிய மாணவர்களுக்கு பாராட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டாக்டர்கள், சுகாதாரத்துறை, தூய்மைப் பணியாளர்கள் மற்றும் போலீசார் உட்பட பலர் ஈடுபட்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல்துறைக்கு பல்வேறு தன்னார்வ அமைப்பு உள்ளிட்டோர் பலர் உதவி செய்து வருகின்றனர். அவ்வகையில் ஸ்டேன்ஸ் ஐ. சி. எஸ். இ மற்றும் சி.எஸ்.அகாடமி பள்ளியை சேர்ந்த 10 மாணவர்கள் ஒன்றிணைந்து மற்றும் குடும்பத்தார் நண்பர்கள் உதவியுடன் திருப்பூர் மாநகர காவல்துறை […]
மதுரை அருகே கோட்டைபட்டியில் தந்தையை அடித்துக்கொன்ற மகன் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள கோட்டைபட்டியைச் சேர்ந்தவர் குமார் போஸ் (வயது 64). மின்வாரியத்தில் போர்மேனாக பணியாற்றி ஓய்வுபெற்றவர். இவருக்கு மனைவி மற்றும் 3 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். இதில் இளைய மகன் சரவணகுமார் (35) கட்டிட வேலை பார்த்து வந்தார். குமார் போசுக்கு மாதந்தோறும் வரும் ஓய்வூதிய பணத்தை சரவணகுமார் பல்வேறு காரணங்களை கூறி வாங்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் தந்தை-மகனுக்கு இடையே அடிக்கடி […]
மதுரை சீமான் நகர் பகுதியில் திருடு போன இருசக்கர வாகனம் போலிசாரின் வாகன சோதனையில் பிடிபட்டது நேற்று 20.03.2025 ந்தேதி மதுரை மாநகர் திலகர் திடல் போக்குவரத்துகாவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட டைட்டன் ஷோரூம் சிக்னல் அருகே போக்குவரத்து சார்பு ஆய்வாளர்திரு.லிங்ஸ்டன் மற்றும் தலைமை காவலர்.1418 விஜயன், தலைமை காவலர் .த.க. 3094 முகம்மது ரபீக் ஆகியோர்கள் வாகனத் தணிகை செய்து கொண்டிருந்த போது நம்பர் பிளேட் இல்லாமல் ஹோண்டா டியோ இருசக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டி […]