Police Department News

சைபர் கிரைம் குற்றங்களை பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர்

சைபர் கிரைம் குற்றங்களை பற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல்துறையினர்
கிருஷ்ணகிரி மாவட்டம்
04.11.2022
கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின்படி கிருஷ்ணகிரி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தலைமையிடம் சைபர் கிரைம் அவர்கள் வழிகாட்டுதலின் பேரில் கிருஷ்ணகிரி சைபர் கிரைம் காவல் ஆய்வாளர், காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் மூலமாக இன்று 04.11.2022 கிருஷ்ணகிரி அறிஞர் அண்ணா கல்லூரியில் சைபர் கிரைம் சம்பந்தமாக விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. ஆன்லைனில் மோசடியாளர்களால் பணம் ஏமாற்றப்பட்டால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணிற்கு அழைத்து மோசடியான பணப்பரிவர்த்தனை விவரங்களை தெரிவிப்பது குறித்தும்
சமூக வலைதளங்களில் அடையாளம் தெரியாத நபர்களால் பாதிக்கப்பட்டாலோ அல்லது மற்ற சைபர் கிரைம் குற்றங்களால் பாதிக்கப்பட்டாலோ www.cybercrime.gov.in என்ற இணையதளம் மூலம் புகார் அளிப்பது குறித்தும் Cyber Crime Awareness Notice வழங்கி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.