காவல் துறையினர் வாகன சோதனையின் போது வண்டி சாவியை எடுப்பது சட்டப்படி சரியா?
குற்ற விசாரணை முறைச்சட்டம் பிரிவு 102 ன்படி நான்தான் வாகனத்தின் உரிமையாளர் என்று உரிய ஆவணங்களை காண்பிக்க தவறும் போதும் ஓரு வாகனமானது திருடப்பட்டுள்ளது அல்லது ஒரு குற்றத்தை புரிந்து விட்டு தப்பிப்பதற்காக அவ்வாகனம் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முகாந்திரம் இருக்கும் பட்சத்தில் வண்டி சாவியை எடுக்கலாம் அல்லது மோட்டார் வாகன சட்டம் 185 பிரிவின் கீழ் குடி போதையில் வண்டியை ஓட்டி வந்திருந்தாலும் வண்டிச்சாவியை காவலர்கள் எடுக்கலாம் ஆவண பரிசோதனைக்கு தேவையான சுமார் பதினைந்து நிமிட கால அளவிற்கு மேல் எந்தவொரு வாகனத்தையும் நிறுத்தி வைக்கவோ அல்லது பறிமுதல் செய்யவோ முடியாது.
ஒருவேளை பறிமுதல் செய்வதாக இருந்தால், அப்படி பறிமுதல் செய்ததற்கான காரண காரியத்தோடு கூடிய ஒப்புதலை, காவலர்கள் அவ்வாகனத்தை ஒட்டி வந்தவருக்கு உடனடியாக வழங்க வேண்டும்.