பொய் வழக்கில் பதிலடி கொடுப்பது எப்படி?
பொதுவாகவே வழக்கில் சிக்கி கொண்டவர்கள் அதற்கு காரணமானவர்கள் மீது எந்த விதமான மாற்று. நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து யோசித்து, புகாருக்கு புகார்தான் தீர்வு என காவல் நிலையத்தின் உதவியைத்தான் அதிக பட்சமாக நாடுவார்கள்.
புகாருக்கு புகார் என்பது சரியான வழி அல்ல.
கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய்! என்பது முதுமொழி. இதேபோல் எந்த ஒரு வழக்கிலும் தீர விசாரிப்பது என்பது, குறுக்கு விசாரணைதான். எனவே, உங்களிடம் உள்ளங்கை நெல்லிக்கனியாக உள்ள ஆவணம் அல்லது ஆதாரம் அல்லது சாட்சிதான் மிகச்சரியானது என்பதை இந்திய சாட்சிய சட்டம் 1872இன் உறுபு 145 இன் கீழ் நீதிமன்றத்தில் நடக்கும் குறுக்கு விசாரணையில் சாட்சியை முரண்படுத்தி உங்கள் தரப்பு என்னவோ அதை நிலை நிறுத்த வேண்டும். இது ரொம்ப சுலபமான வேலை
எந்த வகையான பொய் வழக்கு வருவதாக இருந்தாலும் அவ்வழக்கில் மிக, மிகத்துல்லியமான உண்மை நிலையை எழுத்துப்பூர்வமாக எடுத்துக் கூறி விட்டு, இதில் சொல்லி உள்ள சங்கதிகளை மெய்ப்பிக்க நான் தயாராக இருக்கிறேன். நீங்கள் பொய்ப்பிக்க தயாராக இருந்தால் வழக்கை தொடருங்கள் என தார்மீக அனுமதி அளிக்கலாம். இந்த வகையில் எழுதப்படும் ஒரு கடிதம் எவர் ஒருவரையும் கண்டிப்பாக சிந்திக்க வைக்கும்.