Police Department News

மதுரையில் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு

மதுரையில் முக்கிய இடங்களில் தீவிர கண்காணிப்பு

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள பாபர் மசூதி கடந்த 1992-ஆம் ஆண்டு இடிக்கப்பட்டது.பாபர் மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6-ந் தேதி நாளை என்பதால் தமிழகத்திலும் அசம்பாவிதங்களை தடுக்கும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

மதுரை மாவட்டம் முழுவதும் சுமார் 2000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவில், அழகர்கோவில், திருப்பரங்குன்றம் முருகன் கோவில், தல்லாகுளம் பெருமாள் கோவில் மற்றும் தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட வழிபாட்டு தலங்கள், மக்கள் அதிகம் கூடும் பஸ்- ரெயில் நிலையங்கள், விமான நிலையம் ஆகியவற்றில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டுள்ளன.

ரெயில் நிலையத்தில் பயணிகள் மெட்டல் டிடெக்டர் வழியாக உள்ளே செல்ல அனுமதிக்கப்படு கிறார்கள். பயணிகளின் உடமைகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகிறது. மேலும் பார்சல் அனுப்பவும் பல்வேறு கட்டுப்பாடுகள் போடப்பட்டுள்ளது.

தண்டவாளங்கள், ரெயில் பெட்டிகளிலும் அடிக்கடி சோதனை நடத்தப்பட்டு வருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள வாகன சோதனை சாவடிகளிலும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

மதுரை விமான நிலையப்பகுதியிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.