Police Department News

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி

மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் இன்று போக்குவரத்துத்துறை சார்பாக அமைச்சர் முர்த்தி சாலை பாதுகாப்பு தொடர்பான இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு அரசு சாலை விபத்துகளை தவிர்த்திடும் நோக்கில் நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துத்துறை மற்றும் காவல்துறை ஆகிய துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எதிர்பாராமல் நடக்கும் ஒரு சாலை விபத்தின் மூலம் எதிர்பாராத மருத்துவ செலவு, உயிரழப்பு, ஒரு குடும்பத்தின் வாழ்வாதாரமே பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படுகின்றது. இதனை கருத்திற்கொண்டு பொது மக்கள் சாலை விதிகளை கட்டாயம் பின்பற்றுவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் சாலை பாதுகாப்பு வார விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி மதுரை மாவட்டத்தில் நடப்பாண்டில் 11.01.2023 முதல் சாலை பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு பல்வேறு விழிப்புணர்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் இந்த பேரணி நடந்தது. இதில் ஆண்கள், பெண்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இப்பேரணி மதுரை காந்தி நினைவு அருங்காட்சியகம் வளாகத்தில் தொடங்கி கே.கே நகர் தோரண வாயில் வழியாக மதுரை மத்திய வட்டார போக்குவரத்து அலுவலக வளாகத்தில் நிறைவு பெற்றது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், மதுரை தெற்கு சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன் , இணை போக்குவரத்து ஆணையர் பொன் செந்தில் நாதன், வட்டார போக்கு வரத்து அலு வலர்கள் சிங்கார வேலன், சித்ரா உள்பட வட்டார போக்கு வரத்து ஆய்வாளர்கள், அரசு அலுவலர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.