Police Department News

போலி உரிமம் மூலம் பல தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடிகளை சம்பாதித்த பலே கில்லாடி சென்னை பெருநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

போலி உரிமம் மூலம் பல தொழிலதிபர்களை ஏமாற்றி பல கோடிகளை சம்பாதித்த பலே கில்லாடி சென்னை பெருநகர காவல் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் கிளையை சென்னையில் தொடங்க உரிமம் வாங்கி தருவதாக கூறி போலியாக உரிமம் தயாரித்து ரூ.2,82,50000 ஏமாற்றியவர் கைது.
சென்னையை சேர்ந்த திரு எம் எஸ் ராஜேந்தர் என்பவரிடம் சென்னை முகப்பரை சேர்ந்த தற்சமயம் மும்பையில் வசித்து வரும் பிரதி ஆ/ வ த/ பெ ராதாகிருஷ்ணன் என்பவர் மும்பையில் உள்ள ஆதித்யா பிர்லா நிறுவனத்தில் உள்ள Louis Philippe, Allen Solly, Van Heusen கடைகளுக்கான Franchise licence ஐ M/S Krish Fashion Studio என்ற பெயரில் வாங்கி தருவதாக புகார் தாரரிடம் ஆசை வார்த்தைகள் சொல்லி பிரதிக் என்பவர் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார்தாரருக்கு ஆதித்யா பிர்லா நிறுவனத்தின் logo,Seal,Vice President Geetika Anand,Kedar Apshankar , Chief Opening Officer, Biny Swain DGM ஆகியோர்களின் பெயர்களின் கையொப்பங்களை போலியாக தயார் செய்தும் Franchise Agreement தயார் செய்தும் அவற்றை உண்மையென புகார் தாரரை நம்ப வைத்து வங்கிப் பரிவர்த்தனைகள் மூலமாகவும் மற்றும் ரொக்கமாகவும் பணம் ரூபாய் 2,82,50000 .வரை பெற்றுக் கொண்டு Franchise licence பெற்று தராமலும் வாங்கிய பணத்தை திருப்பி தராமல் வாதி பணத்தை திருப்பி கேட்டதற்கு எதிரிகள் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்து ஏமாற்றி வருவதாக நடவடிக்கை எடுக்குமாறு வாதி கனம் காவல் ஆணையாளர் அவளிடம் கொடுத்து புகாரின் பேரில் CCB Cr.No 234/2022 u/ s 406,419,420,465,468,471,506( i) r/ w 120(B) IPC மில் வழக்கு பதிவு செய்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இவ் வழக்கில் தலைமறைவாக இருந்து வந்தவரை கைது செய்ய வேண்டி காவல் ஆணையாளர் உத்தரவிட்டதன் பேரில் மத்திய குற்றப்பிரிவு நம்பிக்கை ஆவன மோசடி EDF -1 பிரிவில் தனிப்படை அமைக்கப்பட்டு மும்பையில் வைத்து பிரதி என்பவரை 13. 1 .2023 ஆம் தேதி கைது செய்து விசாரணை செய்ததில் எதிரி இதேபோன்று பலரிடம் உரிமை வாங்கி தருவதாக பல கொடிகள் பணத்தைப் பெற்றுக் கொண்டு பல நபர்களை ஏமாற்றி வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. விசாரணைக்கு பின் கணம் மத்திய குற்றப்பிரிவு குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எழும்பூர் அவர்கள் முன்பு ஆஜர் படுத்தி உத்தரவுப்படி 25 .1 .2023 ம் தேதி வரை நீதிமன்ற காவலில் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் மேலும் இவ்வழக்கில் வேறு யாராவது சம்பந்தப்பட்டுள்ளார்களா என்ற கோணத்தில் தொடர்ந்து புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Leave a Reply

Your email address will not be published.