Police Department News

தேவகி சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன புற்று நோய்க்கான சிகிச்சை

தேவகி சிறப்பு மருத்துவமனையில் உலகத்தரம் வாய்ந்த நவீன புற்று நோய்க்கான சிகிச்சை

மருத்துவம் ஓர் மகத்தான சேவை, சாதாரண மனிதனுக்கும் எளிதில் சென்றடைய மனிதநேயத்துடன் கூடிய தரமான மருத்துவ சேவை செய்வதை நோக்கமாகவும், குறைந்த செலவில் பாதுகாப்பான மற்றும் தரமான மருத்துவ சேவைகள் எளிதில் கிடைக்க பெற வேண்டும் என்ற குறிக்கோளுடன் 1998-ம் ஆண்டு கருப்பு வெள்ளை ஸ்கேன் கருவியுடன் தனது மருத்துவ சேவையை தொடங்கியது.

22 ஆண்டுகளுக்கு முன்பு அதிநீவன ஸ்கேன் கருவிகளை கொண்டு தென் தமிழகத்தில் ஒரு புரட்சியை செய்து வந்தது. குறைந்த செலவில் தரமான மருத்துவ பரிசோதனை கிடைப்பதால் மதுரை மற்றும் அதனை சுற்றியுள்ள 10 மாவட்டங்களிலும் இருந்து மக்கள் CT ஸ்கேன், MRI Scan, USG ஸ்கேன், ECG. ECHO, TMT, DIGITAL X-RAY, Mammogram மற்றும் அதிநவீன ரத்த பரிசோதனை ஆய்வகம் (Laboratory) மூலம் பயன் பெறுகின்றனர்.

முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் 2006-ம் ஆண்டு தேவகி புற்றுநோய் சிகிச்சை பிரிவை தொடங்கி வைத்தார். தென் தமிழகத்தில் 17 ஆண்டுகளுக்கு முன்பே அதிநவீன “லீனியர் அக்ஸிலரேட்டர்” புற்றுநோய் கதிர்வீச்சு கருவியை கொண்டு புற்று நோய்க்கான துல்லியமான சிகிச்சையை இன்று வரை தொடர்ந்து வழங்கி வருகிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு தேவையான அறுவை சிகிச்சை பிரிவு, கீமோதெரபி என்னும் மருத்துவ சிகிச்சை பிரிவு, கதிர்வீச்சு சிகிச்சை பிரிவு என அனைத்து வசதிகளையும் ஒரே இடத்தில் கிடைப்பதால் நோயாளிகள் அதிக அளவில் பயனடைகிறார்கள்.

புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்த உலக சுகாதார நிறுவனத்தால் ஆண்டு தோறும் பிப்.4-ந்தேதி உலக புற்றுநோய் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

2023-ஆம் ஆண்டில் Close the care gap என்பதே இந்த தினத்தின் மையக் கருத்தாக உள்ளது. புற்றுநோயால் பாதித்தவர்களுக்கு அதற்கான முறையான குணப்படுத்த கூடிய சிகிச்சையை கொண்டு சேர்க்க வேண்டியது அவசியமாகும். இதை மனதில் வைத்து மதுரை அரசரடி, தேவகி புற்றுநோய் சிகிச்சை மையத்தில் இந்த வருடம் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நவீன லீனியர் ஆக்ஸிலரேட்டர் கருவியான Halycon கருவி தென் இந்தியாவில் முதல்முறையாக நிறுவப்பட்டுள்ளது. இது ஆரம்ப நிலையில் கண்டறியப்படும் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்துவது மட்டுமின்றி பக்க விளைவுகளை குறைக்கிறது. இதில் 4 விதமான கதிர்வீச்சு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

  1. IMRT சிகிச்சையில் திருத்திய செறிவுடன் புற்றுநோய் பாதித்த இடத்தில் முப்பரிமான கதிர்வீச்சை செலுத்தி சுற்றியுள்ள நல்ல திசுக்களை பாதுகாக்கிறது.

2.VMAT என்னும் சுழல் கதிர்வீச்சு மூலம் மிக குறைவான நேரத்தில் துல்லியமான கதிரியக்கத்தை செலுத்துவதாகும்.

  1. IGRT என்பது தினமும் நோய் பாதித்த இடத்தை CT Scan மூலமாக கண்டறிந்து கதிர்வீச்சை நோயின் அசைவிற்கு ஏற்ப கொண்டு சேர்ப்பதாகும்.
  2. Stereotactic முறையில் மிக சிறிய அளவிலான தலை மற்றும் உடலில் உள்ள கட்டிகளை மிக குறுகிய நாட்களில் துல்லியமாக கொண்டு சேர்க்கிறது. இந்த சிகிச்சையை வெளி நோயாளியாக இருந்தே தினமும் எடுத்துக் கொள்ளலாம்.

தேவகி மருத்துவமனையில் கடந்த 17 ஆண்டுகளாக சிறந்த மருத்துவர்கள் மற்றும் உபகரணங்கள் மூலம் லட்சத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் இதுவரை பயனடைந்துள்ளனர். தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு, மாநில-மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வு பெற்ற பணியாளர்கள், இ.எஸ்.ஐ. பயனாளிகள், தனியார் மருத்துவ காப்பீடு உள்ளவர்களுக்கு கட்டணமின்றி சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 0452 -2288832 (Emergency No: 96006 00888) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published.