மதுரை மாவட்ட காவல்துறை சார்பில் சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்கும் சோதனை சாவடி திறப்பு
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டை காவல் நிலையம் சார்பில் அச்சம் பத்து நான்கு வழி சாலையில் 24X7 சூரிய ஒளி மின்சாரத்தில் இயங்க கூடிய சோதனை சாவடி நாளை 06.02.2023 திங்கட்கிழமை மதுரை மாவட்ட கண்காணிப்பாளர் திரு. R. சிவபிரசாத் IPS அவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்து துவக்கி வைக்கிறார். உடன் காவல் துணை கண்காணிப்பாளர் திரு. R. பாலசுந்தரம் B.Sc, B.Ed.அவர்கள் முன்னிலையிலும் காவல் ஆய்வாளர் B. சிவக்குமார் B.B.A. அவர்கள் ஒருங்கிணைப்பில் திறந்து வைக்கிறார்.
உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்வதாக கூறி இளம்பெண் பலாத்காரம்: வாலிபருக்கு 10 ஆண்டு சிறை உளுந்தூர்பேட்டை அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகூறி இளம்பெண்ணை பலாத்காரம் செய்த வாலிபருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரூ.5 லட்சம் அரசு இழப்பீட்டு தொகை வழங்கவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே செம்மார் கிராமத்தைச் சேர்ந்தவர் வினோத்(30). இவர் கடந்த 2019ம் […]
திருமணமாகி ஒரு வருடமாக குழந்தை இல்லை குடும்ப தகராறில் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை: சாவில் மர்மம் இருப்பதாக உறவினர்கள் சாலை மறியல் திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் முரளிதரன் (30). இவர் அம்பத்தூர் பகுதியில் ஆட்டோமொபைல் ஸ்பேர்பார்ட்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலையில் சூப்பர்வைசராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கும் திருவொற்றியூர் பகுதியைச் சேர்ந்த ஷாலினி (25) என்ற பெண்ணுக்கும் கடந்த வருடம் மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஒரு வருடமாக குழந்தை இல்லை என்பதால் கணவன் […]
ட்ரோன் கேமரா மூலம் அதிகாரிகள் ஆய்வு மதுரை அவனியாபுரம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மீனாட்சி நகர் பகுதியில் இணை ஆணையர் திரு. தங்கதுரை உதவி ஆணையர் திரு. சக்கரவர்த்தி காவல் ஆய்வாளர் திரு. பிரபு மற்றும் காவல் உதவி ஆய்வாளர் திரு. சந்தான போஸ் ஆகியோர் ட்ரோன் கேமரா உதவி மூலம் கண்காணிப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபட்டனர்.