Police Department News

கோவையில் போதை மாத்திரைகள் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவையில் போதை மாத்திரைகள் பதுக்கி விற்ற 2 வாலிபர்கள் கைது

கோவை மாநகரில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வலி நிவாரணி மாத்திரைகளை போதை மாத்திரையாக பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதனை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். கல்லூரிகளில் போதை பழக்கம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்கள்.

மேலும் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து போதை மாத்திரைகளை விற்பனை செய்யும் கும்பலை கண்காணித்து கைது செய்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். இதுவரை மாநகரில் போதை மாத்திரைகளை பதுக்கி விற்ற 35-க்கும் மேற்பட்டவர்களை கைது செய்யப்பட்டு உள்ளனர்.

போலீசார் மருந்துக்கடை உரிமையாளர்களுக்கு டாக்டர்களின் பரிந்துரை கடிதம் இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகளை விற்பனை செய்ய கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் சிலர் திருட்டு தனமாக வலி நிவாரணி மாத்திரைகளை சட்ட விரோதமாக வாங்கி போதைக்காக கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து விற்பனை செய்து வருகிறார்கள்.

இந்தநிலையில் மாநகர போலீசாருக்கு குனியமுத்தூர் சதாம் நகரில் உள்ள காலி இடத்தில் சிலர் போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களுக்கு விற்பனை செய்வதாக ரகசிய தகவல் வந்தது.

இதனையடுத்து குனியமுத்தூர் போலீஸ் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் தலைமையிலான போலீசார் தகவல் வந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அங்கு போதை மாத்திரைகளை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்த டி.ஏ.எச். காலனியை சேர்ந்த ஜியாவூதீன் (வயது 31), செந்தமிழ் நகரை சேர்ந்த பெயிண்டர் சத்தியமூர்த்தி (19) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து விற்பனைக்காக வைத்து இருந்த 27 போதை மாத்திரைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் போலீசார் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.