
எந்த அரசூழியர் கூப்பிட்டாலும் உடனே போக வேண்டுமா?
எந்தவோர் அரசூழியர் நம்மை விசாரணைக்கு அழைத்தாலும், அதற்கு சட்டப்படியான அழைப்பாணையை (சம்மன்) நமக்கு கொடுக்க வேண்டும்.
ஆனால், சில நடைமுறை சிக்கல் காரணமாக அழைப்பாணை கொடுத்து விசாரணைக்கு அழைப்பதில்லை என்றாலும் இது சரியல்ல.
குற்ற விசாரணை முறை விதியில் (crpc) குறிப்பிடப்பட்டுள்ள செயல்துறை நடுவர்கள் என்பது சூழ்நிலைக்கு ஏற்ப வட்டாச்சியர், கோட்டாச்சியர் மற்றும் மாவட்ட ஆட்சியரையே குறிக்கும்.
இவர்கள் இப்படி நீர், நிலம் தொடர்பான விசாரணைக்கு நம்மை அழைத்தால், கு.வி.மு.வி 145 (9)இன்படி அழைப்பாணையும், அப்பிரச்சினைக்கு உரிய விளக்கத்தை 145(3)இன்படியும் நமக்கு வழங்கியே ஆகவேண்டும்.
இதையே காவல்துறையினர் அழைத்தால் குற்ற விசாரணை முறை சட்டம் பிரிவு 160 இன் கீழும், நீங்கள் குடியிருக்கும் எல்லைக்கு வெளியில் உள்ள காவல் நிலையத்துக்கு அழைத்தால், 160(2) இன்படி, போய் வருவதற்கான கட்டணச் செலவையும் கூடவே வழங்க வேண்டும்.
