ANTI DRUG CLUB ன்-100வது விழிப்புணர்வு நிகழ்ச்சி
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் உத்தரவின் படி, மதுரை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு சார்பாக, பள்ளிகள், கல்லூரிகள், பல்வேறு சங்கங்கள் மற்றும் பொது இடங்களில் ANTI DRUG CLUB எனும் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு போதை பொருள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் 100வது நிகழ்ச்சியாக இன்று( 18.10.2024) வேலம்மாள் மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரியில் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ.லோகநாதன் I.P.S., அவர்களின் தலைமையில் வேலம்மாள் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாணவ மாணவியர்களிடம் போதை பொருள்கள் பற்றியும்,
ANTI DRUG CLUB எவ்வாறு செயல்படுகிறது என்பது பற்றியும், போதைப் பொருள் இளைஞர்களிடம் பரவாமல் தடுக்க மருத்துவர்களால் காவல்துறைக்கு எவ்வாறு உதவலாம் என்பது பற்றியும் மாநகர காவல் ஆணையர் அவர்கள் சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியின் வரவேற்புரையை தலைமை மருத்துவர் திரு. திருநாவுக்கரசு அவர்களும் போதைப் பொருள் துஷ்பிரயோகம் என்ற தலைப்பில் மருத்துவ கல்லூரி மாணவி சகானா மற்றும் போதைப் பொருள் துஷ்பிரயோகத்தை எவ்வாறு தடுப்பது என்ற தலைப்பில் மருத்துவ கல்லூரி மாணவர் ராகுல் அவர்களும் உரையாற்றினர். ANTI DRUG CLUB ன் மூலம் இளைஞர்கள் எவ்வாறு காவல்துறையை தொடர்பு கொள்ளலாம் என்பது பற்றி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் திரு. சேதுமணி மாதவன் எடுத்துரைத்தார். நிகழ்ச்சியின் இறுதியாக மருத்துவ பேராசிரியர் திரு. மகேஷ் கிருஷ்ணா நன்றியுரை நிகழ்த்தினார்.
இந்நிகழ்ச்சியில் தாசில்தார் திருமதி. ஆனந்தி, வேலம்மாள் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் மருத்துவக் கல்லூரி & செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவலர்கள் கலந்து கொண்டனர்.