Police Department News

பாலக்கோடு அருகே தூக்கிட்டு தற்கொலை! உதவி கலெக்டர் விசாரணை

பாலக்கோடு அருகே தூக்கிட்டு தற்கொலை! உதவி கலெக்டர் விசாரணை

தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகேதெத்துபள்ளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ஆனந்தன் மனைவி சவுந்தர்யா 19 வயது திருமணம் ஆகி 7 மாதத்தில் 3 மாத கர்ப்பிணியாக இருந்தார். குடும்பப் பிரச்சினை காரணமாக சில தினங்களாக மனம் உடைந்து சோர்வாக காணப்பட்டுள்ளார். வீட்டில் யாரும் இல்லாத போது வீட்டின் பின்புறம் இருந்த புளிய மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரித்து வருகின்றனர். மேலும் திருமணம் ஆகி 7 மாதம் என்பதால் சௌந்தர்யா தற்கொலை குறித்து உதவி கலெக்டர் கீதா ராணி விசாரணை செய்து வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.