மதுரை மாவட்டத்தில் விபத்தை தவிர்க்க ரூ.100 கோடியில் 7 மேம்பாலங்கள்
மேலூர் தாலுகா அலுவலகம் முன்பு நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் தானியங்கி சூரியசக்தி பயணிகள் நிழற்குடை அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நடந்தது. இதில் மதுரை எம்.பி. வெங்கடேசன் கலந்து கொண்டு நிழற்குடையை திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது:-
மேலூர், கொட்டாம்பட்டி ஆகிய பகுதிகளில் ரூ.10 கோடியில் பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற உள்ளது. மேலூர் பகுதியில் அதிக சாலை விபத்துகளும், அதன் மூலம் மாதத்தில் 15 உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் ரூ.100 கோடியில் மதிப்பீட்டில் 7 இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்கப்படுகிறது.
மேலூர் அரசு மருத்துவ மனையில் அவசர சிகிச்சை பிரிவு நிறுவப்பட்டு அவசர சிகிச்சைக்காக வருப வர்களை மதுரைக்கு அனுப்பாமல் மேலூர் அரசு மருத்துவ மனையிலேயே சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. மதுரை மாவ ட்டத்தில் 73 பள்ளிகள் தற்போது தமிழக முதல்வரின் காலை உணவு திட்டத்தில் சேர்க்கப்ப ட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து மேலூர் பள்ளிகளையும் இந்த திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
பயணிகள் நிழற்குடை திறப்பு விழாவில் மேலூர் நகர் மன்ற தலைவர் முகமது யாசின், ஆணையாளர் ஆறுமுகம், பொறியாளர் பட்டுராஜன், துணைத் தலைவர் இளஞ்செழியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், மாநில குழு உறுப்பினர்கள் பாலா, பொன்னுத்தாய், தாலுகா செயலாளர் கண்ணன். மேலூர் தாலுகா குழு உறுப்பினர் மணவாளன், முன்னாள் நகர் மன்ற தலைவர் கென்னடியான், கவுன்சிலர் பாண்டி, தி.மு.க. நிர்வாகிகள் மலம்பட்டி ரவி, முருகானந்தம், ஒப்பந்ததாரர் லத்தீப் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.