மதுரையில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் சட்ட விரோதமாக நடந்து கொண்டவர்கள் மீது வழக்கு
மதுரை மாநகரில் 30.10.2021 ஆம் தேதி நடைபெற்ற தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தின் போது, பெரியார் பஸ் நிலையத்திலிருந்து நத்தம் செல்லும் T.N.68 N. 1918 என்ற அரசு பேருந்து மதியம் 01.30 மணியளவில் மதுரை டவுன் கோரிப்பாளையம் பஸ் நிறுத்தம் முதலியார் இட்லி கடை அருகில் சென்றபோது தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மேற்கண்ட அரசு பேருந்தின் மீது ஏறி பேருந்தில் ரகளை செய்து பேருந்தின் முன் பக்க கண்ணாடியை உடைத்துள்ளனர். இது சம்பந்தமாக சம்பந்தப்பட்ட நபர்கள் மீது சட்ட விரோதமாக கூடுதல் மற்றும் அரசு சொத்திற்கு சேதம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்ற எண் 1240/2021 படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக மேற்படி சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 28 எதிரிகள் ட்ரோன் கேமரா பதிவுகள் போலீஸ் ஒளிப்பதிவுகள் மற்றும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்டனர்.
மேலும் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது மதுரை மாநகரின் பல இடங்களில் இரு சக்கர வாகனங்களை அதிவேகமாக ஓட்டி பொது மக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய சுமார் 150 இரு சக்கர வாகனங்களை படம் பிடித்து வாகன ஓட்டிகள் மீது மோட்டார் வாகன சட்டத்தின்படி இ சலான் மூலம் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மதுரை மாநகரில் தேவர் ஜெயந்தி விழா கொண்டாட்டங்களின் போது இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை அதி வேகமாகவும் அதிக ஒலி எழுப்பியும், ஓட்டி பொது மக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய 112 இரு சக்கர வாகனங்ககள் மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் மீது 13 இந்திய தண்டனை சட்ட வழக்குகள் நான்கு 75 MCP வழக்குகள் மற்றும் 62 மோட்டார் வாகனச் சட்ட வழக்குகள் உள்பட மொத்தம் 79 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ரூபாய் 1,36,600/− அபரதம் விதிக்கப்பட்டுள்ளது.