பாலக்கோடு அரகே இளம்பெண்ணை கடத்தியதாக வாலிபர் மீது புகார் செய்யப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள நல்லூர் பகுதியை சேர்ந்த மாதேஷ். இவருடைய மனைவி சரிதா (வயது 20). இவர்களுக்கு ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணமானது. உறவினர் வளைகாப்பு நிகழ்ச்சிக்காக 7 பவுன் தங்க நகையுடன் சென்ற சரிதா மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இது குறித்து அவரது மாமியார் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதில் அட்டை புழுக்கை கிராமத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் மருமகளை கடத்திச் சென்று இருக்கலாம் என புகார் கொடுத்தார். அதன்பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.