Police Department News

என் கணவரிடம் நீ பேசாதே, பழகாதே’ – கோயம்பேட்டில் கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண் சென்னை

என் கணவரிடம் நீ பேசாதே, பழகாதே' - கோயம்பேட்டில் கழுத்தறுக்கப்பட்ட இளம்பெண் சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் இரண்டு பெண்களுக்குள் நடந்த தகராறில் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சென்னை கோயம்பேடு பஸ் நிலையத்தின் 1-வது நடைமேடையில் இரண்டு பெண்களுக்கிடையே கடும் வாக்குவாதம் நடந்தது. அப்போது, திடீரென ஒரு பெண், இன்னொரு பெண்ணின் கழுத்தை கத்தியால் அறுத்தார். ரத்த வெள்ளத்தில் அந்தப் பெண் கதறி துடித்தார். அந்தப் பெண்ணின் சத்தம் கேட்டு பயணிகள் அனைவரும் கூடினர். இந்தத் தகவல் கோயம்பேடு காவல் நிலையத்துக்கு உடனடியாக தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார் ரத்தம் படிந்த கத்தியோடு நின்றுகொண்டிருந்த பெண்ணை மடக்கிப்பிடித்தனர். அதே சமயத்தில் உயிருக்குப் போராடிக்கொண்டிருந்த பெண்ணை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். அங்கு அவருக்கு 12 தையல்கள் போடப்பட்டுள்ளன. யார் இவர்கள் என்று போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து கோயம்பேடு போலீஸார் கூறுகையில், ``கொடுங்கையூர் வேம்புலியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முனியம்மாள். இவரின் கணவர் கார்த்திக். நுங்கம்பாக்கம் மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் பிரியா. அவரின் கணவர் ஜான். முனியம்மாளும் பிரியாவும் தோழிகள். இதனால் முனியம்மாள் வீட்டுக்கு பிரியா அடிக்கடிச் செல்வார். அப்போது கார்த்திக்குக்கும் பிரியாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்தப் பழக்கத்தை முனியம்மாள் கண்டித்தார். ஆனால், இருவரும் கேட்கவில்லை. இந்தச் சமயத்தில்தான் நேற்றிரவு முனியம்மாளும் பிரியாவும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்துள்ளனர். அப்போது முனியம்மாள்,நீ, என் கணவரிடம் பேசாதே, பழகாதே என்று நான் பல தடவைக் கண்டித்துவிட்டேன். ஆனால், நீ கேட்காமல் தொடர்ந்து பழகிவருகிறாய். இதனால் வீட்டில் எங்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்படுகிறது. நீ உயிரோடு இருந்தால்தானே பேசுவாய், செத்துபோ’ என்று கூறியபடி மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து பிரியாவின் கழுத்தை அறுத்துள்ளார்.
அதைத் தடுக்க பிரியா போராடி தோற்றுப்போய்விட்டார். பிரியாவின் கழுத்தில் கத்திக்காயங்கள் ஏற்பட்டதும் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்துவிட்டார். இந்தச் சம்பவத்தைப் பார்த்த ரோந்து போலீஸார் முனியம்மாளைப் பிடித்துவிட்டனர். பிரியாவை மருத்துவமனையில் சேர்த்தனர். பிரியாவைக் கொலை செய்ய முயன்ற குற்றத்துக்காக முனியம்மாளைக் கைது செய்துள்ளோம். அவரிடமிருந்து கத்தியையும் பறிமுதல் செய்துள்ளோம்” என்றனர்.
முனியம்மாளிடம் இந்த நேரத்தில் ஏன் கோயம்பேடு பஸ் நிலையத்துக்கு வந்தீர்கள் என்று போலீஸார் விசாரித்தபோது `நானும் பிரியாவும் பாலியல் தொழிலாளிகள்’ என்று கூறியுள்ளார்.
பயணிகள் அதிகம் நடமாடும் கோயம்பேடு பஸ் நிலையத்துக்குள் இளம் பெண் ஒருவர் கழுத்தறுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திரு சந்தோஷ் அம்பத்தூர்

Leave a Reply

Your email address will not be published.