
கடையம் அருகே வீட்டில் நகை-பணம் கொள்ளை
கடையம் அருகே உள்ள முதலியார்பட்டியை சேர்ந்தவர் அகமது மீரான். இவரது மனைவி அசன் பாத்து (வயது 75). இவர் நேற்று மதியம் வீட்டை பூட்டி விட்டு சாவியை கதவின் மேலே வைத்துவிட்டு அருகிலுள்ள கடைக்கு சென்றுள்ளார்.
இந்நிலையில் சிறிது நேரத்திற்கு பின்னர் வீடு திரும்பிய அசன் பாத்து வீட்டின் கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சியடைந்தார். வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த பணம் ரூ.5 ஆயிரம் மற்றும் 5 கிராம் தங்க மோதிரம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து கடையம் போலீசில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் திருட்டு சம்பத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே பகுதியில் மன்சூர் அலிகான் என்பவரது வீட்டில் ரூ.7 லட்சம் பணம், 28 கிராம் தங்கநகைகள் கொள்ளை யடிக்கப்பட்ட நிலையில் தற்போது பட்டப்பகலில் அதே பகுதியில் திருட்டு சம்பவம் நடந்துள்ளது அப்பகுதி மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது.
