சங்கரன்கோவில் அருகே மனைவியின் காதை கடித்த கணவருக்கு போலீசார் வலைவீச்சு
சங்கரன்கோவில் அருகே உள்ள ஓடைக்கரைப்பட்டியை சேர்ந்தவர் வீரபாண்டி. இவரது மனைவி செல்வி( வயது 24). இவர் தனது மனைவியிடம் அடிக்கடி சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இவரது மனைவி செல்வி தனது அம்மாவுடன் ஏழாயிரம்பண்ணையில் 4 மாதமாக வசித்து வந்துள்ளார். அங்கு சென்ற வீரபாண்டி அவரை சமாதானப்படுத்தி ஊருக்கு வரும்படி அழைத்துள்ளார். உடனே செல்வி தனது அம்மாவுடன் ஓடைக்கரைப்பட்டிக்கு வந்துள்ளார். அங்கு செல்வி வீட்டை சுத்தம் செய்து கொண்டிருந்தபோது வீரபாண்டி அவரை கன்னத்தில் அடித்து கீழே தள்ளி உள்ளார். மேலும் அவருடைய காது, கழுத்து பகுதிகளில் கடித்துள்ளார். இதில் காயம் அடைந்த செல்வி, சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் அய்யாபுரம் போலீசார் தப்பி ஓடிய வீரபாண்டியை தேடி வருகின்றனர்