Police Department News

பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது

பாலக்கோட்டில் அனுமதியின்றி எருதாட்டம்; 26 பேர் கைது

பாலக்கோடு ஸ்ரீ புதுர்மாரியம்மன் கோவிலில் அனுமதியின்றி நடந்த எருதாட்ட நிகழ்ச்சியில் காளை முட்டி 9 பேர் படுகாயமடைந்த சம்பவத்தில் 26 பேர் கைது தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு ஸ்ரீபுதூர் மாரியம்மன் திருவிழா கடந்த மார்ச் மாதம் 6 தேதி முதல் 10ம் தேதி முதல் 5 நாட்கள் நடைப்பெற்றது கடைசி நாளான 9ம் தேதி அனுமதியின்றி எருதாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது,
மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட காவல்துறை எருதாட்ட நிகழ்ச்சிக்கு அனுமதி மறுத்திருந்த நிலையில் அதனை மீறி எருதாட்ட நிகழ்ச்சி நடைப்பெற்றது. இதில் வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த எருது கயிறு பிடிக்காமல் கழட்டி விட்டதால் சுற்றிநின்ற பொது மக்களை கொம்பில் குத்தி தூக்கி வீசியது இதில் கொண்ட சாமனஅள்ளியை சேர்ந்த கிருஷ்ணன் (55) முனியப்பன் (42) தீத்தாரஅள்ளியை சேர்ந்த திவ்யா (19) ஆகிய 3 பேருக்கும் பலத்த காயம் ஏற்பட்டு தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
மேலும் பாலக்கோடு கமால் சாகிப் தெருவை சேர்ந்த சிறுவன் மாபூப்பாஷா (15), மந்திரி கவுண்டர் தெருவை சேர்ந்த சக்திவேல் (17) பனாரஸ் தெருவை சேர்ந்த தன்சிம் (22) கொட்டுமாரனஅள்ளியை சேர்ந்த ராணி (47), அன்னா நகரை சேர்ந்த சண்முகம் (28) ஆகிய 6 பேர் படுகாயமடைந்து பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுதிமதிக்கப்பட்டனர்.
இச்சம்பவத்திற்க்கு காரணமான வாழைத்தோட்டம் கிராமத்தை சேர்ந்த சிலம்பரன் (வயது .25), அன்பரசு (வயது.47), முருகன் (வயது .45), ஆறுமுகம் (வயது 46),சபரி (வயது. 29).வெள்ளையன் (வயது .45) உள்ளிட்ட 26 நபர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.