Accidents

சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சத்தியமங்கலம் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி, 1 .2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு

சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் சத்தியமங்கலம் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி, 1 .2 வயது குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழப்பு
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த புதுவடவள்ளியில் உள்ள அதிரடிப்படை காவல் ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வம் இவர் இன்று மாலை தனது மனைவி மற்றும் குழந்தை ஒரு உறவினர் ஒருவர் தனது காரில் அழைத்துக்கொண்டு சத்தியிலிருந்து பண்ணாரியை நோக்கி மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்றபோது புதுவடவள்ளி அருகே மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சாலையின் குறுக்கே ஆடுகள் குறுக்கே வந்தபோது ஆட்டின் மீது மோதாமல் இருப்பதற்காக எதிரே வந்த லாரி ஓட்டுனர் லாரியை எதிர் சாலையில் சென்ற போது திடீரென்று கார் மீது பலத்த சத்தத்துடன் மோதியது .இதில் காரை ஓட்டி வந்த அதிரடிப்படை காவல் ஆய்வாளர் செல்வம் முன் சீட்டில் அமர்ந்திருந்த அவரது மனைவி தேவிஸ்ரீ, ஒன்றரை வயது பெண் குழந்தை ஜனனி ஸ்ரீ ஆகிய மூவரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காரின் பின்னால் அமர்ந்திருந்த அவரது உறவினர் பலத்த காயத்துடன் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். விபத்தில் உயிரிழந்தவரின் உடலையும் சத்தியமங்கலம் போலீசார் மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். சத்தியமங்கலத்தில் குடியிருந்து வரும் அதிரடிப்படை காவல் ஆய்வாளர் செல்வம் புதுவடவள்ளி உள்ள வாடகை வீட்டிற்கு பால் காச்சுவதற்காக தனது உறவினருடன் வந்ததாகவும் அப்போது புதுவடவள்ளி அருகே சாலையின் குறுக்கே ஆடுகள் இருந்ததால் எதிரே வந்த லாரி ஓட்டுநர் லாரியை எதிர்திசையில் ஓட்டியதால் இந்த விபத்து ஏற்பட்டு நான்கு பேர் உயிரிழந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்

Leave a Reply

Your email address will not be published.