பாலக்கோடு பேருந்து நிலையம் சீரமைப்பு பணியை இன்று ஆய்வு செய்த மண்டல செயற் பொறியாளர்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பேருந்து நிலையம் கடந்த சில வருடங்களாக சிமென்ட் தரைதளம் பெயர்ந்து குண்டும் குழியுமாக காணப்பட்டு வந்தது.
இதனால் வாகனங்களின் போக்குவரத்திற்க்கு பெரும் சிரமம் ஏற்பட்டது.
மழை காலங்களில் பள்ளங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரானது பேருந்து செல்லும் போது பொது மக்களின் மேல் தெறிப்பதால் பொதுமக்களும், பயணிகளும் பெரும் பாதிப்படைந்து வந்தனர்.
பேருந்து நிலையத்தின் தரைதளம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.
கோரிக்கையை ஏற்று கடந்த 2ம் தேதி மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் புதிய தரைதளம் அமைக்க 83 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் திட்டத்திற்க்கு அடிக்கல் நாட்டினார்.
அதனை தொடர்ந்து பாலக்கோடு பேரூராட்சி தலைவர் பி.கே.முரளி புதிய தரைத்தளம் அமைக்கும் பணியினை கடந்த 25ம் தேதி பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார்.
தரைதளம் அமைக்கும் பணி நடைப்பெற்று வரும் நிலையில் தர்மபுரி பேரூராட்சிகள் மண்டல செயற்பொறியாளர் மகேந்திரன் பார்வையிட்டு பணியினை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின் போது உதவி செயற்பொறியாளர் சுப்ரமணி, இளநிலை பொறியாளர் பழனி, செயல் அலுவலர் டார்த்தி, துப்புரவு ஆய்வாளர் ரவீந்திரன், கவுன்சிலர் ஜெயந்திமோகன், ஒப்பந்ததாரர் பி.எல்.ஆர்.ரவி ஆகியோர் உடனிருந்தனர்.