Police Department News

காலமும் நாகரீகமும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.

காலமும் நாகரீகமும் மாறிக்கொண்டுதான் இருக்கின்றன.

அதற்கேற்றார்போலமனிதர்களும் தம்மை மாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

ஆனால் அதையும் தாண்டி ஒருசிலர் இன்னும் பழமைமாறாமல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.

இன்னமும் சைக்கிளில்தான் வேலைக்கு..

வியக்கவைக்கும் சென்னை காவலர்..

51 வயதாகும் சரவணன் சென்னை நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில், தலைமைக் காவலராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது அன்றாட பணிகளுக்கு அன்றாடம் சைக்கிளைத்தான் பயன்படுத்தி வருகிறார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘சைக்கிள் ஓட்டுவதன் மூலமாக என்னால் ஃபிட்டாக இருக்க முடிகிறது.

இன்னமும் எனக்குத் தொப்பை இல்லை. மேலும் வாழ்க்கை முறை சார்ந்த நோய்களும் எனக்கு இல்லை.

இதற்கு நான் சைக்கிள் ஓட்டுவதே காரணம்’ என்றார்.

அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ள தலைமைக் காவலர் சரவணனின் வீடு ஆதம்பாக்கத்தில் இருக்கிறது.

அங்கிருந்து காவல்நிலையத்திற்க்கு அவர் தினமும் சைக்கிளில்தான் வருகிறார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், ‘ஒவ்வொரு நாளும் சராசரியாக 40 கிலோ மீட்டர் சைக்கிள் ஓட்டுகிறேன்.

அலுவல் சம்பந்தமாகக்கூட, நான் பைக்கை பயன்படுத்துவது கிடையாது.

நான் சைக்கிள் ஓட்டுவது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

தாங்களும் இதே போல முழு நேரமும் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்கிற ஆசை இருப்பதாகப் பலரும் என்னிடம் தெரிவிக்கின்றனர்.

சைக்கிள் ஓட்டுவதன் மூலம் இரவில் நல்ல உறக்கத்தைப் பெற முடிகிறது.

அத்துடன் குடல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளும் எனக்கு இல்லை. மேலும் சைக்கிள் பயணம் சுற்றுச்சூழலைப் பாதிக்காது’ என்று விவரிக்கிறார்.

நாட்டின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்சினையால் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில்

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்குப் பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமல்லாது, சைக்கிள் பயன்பாடு மூலமும் காற்று மாசுபாடு பிரச்சினையைக் குறைக்கலாம்.

மேலும் தலைமைக் காவலர் சரவணனுடன் பணியாற்றி வருபவரும், நந்தம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் சப்-இன்ஸ்பெக்டருமான சக்ரவர்த்தி கூறுகையில், ‘ஆரம்ப வருடங்களில் வேலைக்கு வர நானும் சைக்கிள்தான் பயன்படுத்தினேன்.

எனினும் பின்னர் பைக்கிற்கு மாறி விட்டேன். ஆனால் சரவணன் இன்னும் சைக்கிள் பயன்படுத்துவது எனக்குப் பெருமையாக உள்ளது’ என்றார்.

சைக்கிள் பயன்படுத்துவது பல்வேறு நன்மைகளைக் கொடுத்தாலும், இன்றைய அவசர சூழலில் நடைமுறையில் பல சிரமங்களும் ஏற்படுத்தலாம்.

எனினும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சைக்கிளையே பயன்படுத்தி வரும் தலைமைக் காவலர் சரவணன் பாராட்டப்பட வேண்டிய ஒருவர்தான் என்று பலரும் பாராட்டிவருகின்றனர்.

Police E News
செய்திகளுக்காக
VRK.ஜெயராமன்MA,Mphil மாநிலசெய்தியாளர்
அருப்புக்கோட்டை-626101
விருதுநகர் மாவட்டம்
.

Leave a Reply

Your email address will not be published.