பாலக்கோடு தனியார் பைனான்சில் பூட்டை உடைத்து 1 இலட்சம் ரூபாய் கொள்ளை,
சிசிடிவி காட்சியை வைத்து போலீசார் விசாரணை
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு குள்ளப் பெருமாள் தெருவை சேர்ந்த செந்தில் (வயது. 42) என்பவர் தீர்த்தகிரி நகரில் தனியார் பைனான்ஸ் வைத்து நடத்தி வருகிறார், அவர் நேற்று இரவு வழக்கம் போல் அலுவலகத்தை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டு இன்று காலை மீண்டும் அலுவலகத்திற்க்கு வந்த போது பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்த போது லாக்கர் வைக்கப்பட்டிருந்த 1 இலட்சம் ரூபாய் திருடப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்து செந்தில் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் காவல்துறையினர் அங்கு இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் நேற்று அதிகாலை மர்ம நபர் ஒருவர் பூட்டை உடைத்து உள்ளே சென்று லாக்கரில் இருந்து பணத்தைத் திருடி செல்லும் காட்சி பதிவாகியிருந்தது, இது குறித்து பாலக்கோடு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர், தற்போது இந்த சி.சி.டிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பாலக்கோட்டில் உரிய அனுமதியின்றி ஏராளமான சிட்பண்ட் நிறுவனங்கள், மைக்ரோ பைனான்ஸ் , கந்து வட்டி பைனான்ஸ் இயங்கி வருவதை தாசில்தார் கண்டும் செயல்பட்டு வருவதால் கூலி, விவசாய தொழிலாளர்கள், பெண்கள் என ஏராளமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
கடந்த 3 மாதத்தில் இது போன்று திருட்டு அதிகரித்து வருவது குறிப்பிடதக்கது.