Police Department News

தர்மபுரி மாவட்ட நகர காவல்துறை உறுதுணையால் மை தர்மபுரி அமரர் சேவை மூலம் 50-ஆவது ஆதரவற்ற புனித உடல் நல்லடக்கம்.

தர்மபுரி மாவட்ட நகர காவல்துறை உறுதுணையால் மை தர்மபுரி அமரர் சேவை மூலம் 50-ஆவது ஆதரவற்ற புனித உடல் நல்லடக்கம்.

மை தருமபுரி அமைப்பின் மூலம் படித்த இளைஞர்களை கொண்டு பல சேவைகளை செய்து வருகிறோம். ஆதரவற்று இறந்தவர்களின் புனித உடல்களை நல்லடக்கம் செய்ய கடந்த 75ஆவது சுதந்திர தினத்தன்று மை தருமபுரி அமரர் சேவை ஆரம்பிக்கப்பட்டது. தருமபுரி மாவட்டம் புட்டிரெட்டிபட்டி ரயில்வே நிலையம் அருகே அடையாளம் தெரியாத முப்பது வயது மதிக்கத்தக்க வாலிபர் இறந்துள்ளார். அவரது உடலை தருமபுரி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்து மை தருமபுரி அமரர் சேவை மூலம் நல்லடக்கம் செய்யப்பட்டது. நல்லடக்கம் செய்யும் திட்டத்திற்கு தூண்டுகோலாய் அப்போதைய தருமபுரி நகர துணை காவல் கண்காணிப்பாளர் திரு.வினோத்‌ அவர்கள் உறுதுணையாக இருந்தார். இதுவரை மை தருமபுரி அமரர் சேவை மூலம் ஐம்பது புனித உடல்கள் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மை தருமபுரி அமைப்பின் நிறுவனர் மதிப்புறு முனைவர் சதீஸ் குமார் ராஜா, மை தருமபுரி அமரர் சேவை ஒருங்கிணைப்பாளர் சமூக சேவகர் அருணாசலம், சமூக சேவகர் தமிழ்செல்வன், விஜயகாந்த், சந்திரசேகர் ஆகியோர் புனித உடலை பொம்மிடி ரயில்வே காவலர் தேவராஜ் அவர்கள் முன்னிலையில் நல்லடக்கம் செய்தனர். மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்.

Leave a Reply

Your email address will not be published.