பாமர மக்கள் பிரச்சினைகளுக்கு கவுன்சலிங் மூலம் தீர்வு, குழந் தைகளைப் பராமரிக்க சிறப்பு வசதி உட்பட பல்வேறு காரணங்களால் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்திய அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் ஆண்டுதோறும் நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்களின் தரத்தை ஆய்வுசெய்து தர வரிசைப் பட்டியலை வெளியிடுவது வழக்கம். இதன்படி இந்த ஆண்டுக் கான ஆய்வுப் பணி நாடு முழு வதும் நடைபெற்றது. இதற்காக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட்டு ஒவ்வொரு காவல் நிலையத்துக்கும் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.
இதில் காவல் நிலையத்தின் சுற்றுச்சூழல், முகப்புத் தோற்றம், காவலர்களின் செயல்பாடு, ஆவணப் பராமரிப்பு, பொதுமக்க ளிடையே காட்டும் அணுகுமுறை ஆகியவை குறித்து மதிப்பீடு செய் யப்படும். இதற்கான ஆய்வறிக்கை உள்துறை அமைச்சகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், தரவரிசைப் பட்டியல் நேற்று முன்தினம் வெளி யிடப்பட்டது. இதில் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையம் இந்திய அளவில் 4-வது இடத்தைப் பிடித்துள்ளது. இது தேனி மாவட்டக் காவல்துறையினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இக்காவல் நிலையத்தை அப் போதைய முதல்வர் ஜெயலலிதா 7.3.94 அன்று நேரில் வந்து திறந்து வைத்தார். தேனி டவுன் காவல் நிலைய வளாகத்தில் ஒருங் கிணைந்து செயல்பட்ட இந்த காவல் நிலையம் 5.2.2004-ல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவல கத்துக்கு அருகே தனி கட்டிடத்தில் செயல்படத் தொடங்கியது.
இதுகுறித்து காவல் நிலைய ஆய்வாளர் மங்கையர்திலகம் கூறியதாவது:
மாற்றுத் திறனாளிகளுக்கான சாய்வுதளம், மரங்களுடன் கூடிய இயற்கைச்சூழல், வரவேற்பறை, குடிநீர், ஆவணப் பராமரிப்பு, பொதுமக்கள் அமர இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் இங்கு உள் ளன. மேலும் குழந்தைகள், பெண் களை விசாரிக்க தனி அறைகள் உள்ளன.
விசாரணைக்குப் பெரியவர்களு டன் வரும் குழந்தைகளைப் பாது காக்கவும், அவர்கள் விளையாட வும் இங்கு வசதி உண்டு. கடந்த ஆண்டு ஆயிரம் மனுக்களுக்கு மேல் தீர்வு காணப்பட்டுள்ளன. இங்கு வருபவர்களிடம் கனிவாக நடந்து கொண்டு அதன் பேரில் தீர்வு காணப்படுகிறது. குடும்பப் பிரச்சினைக்கு எதிர்மறையான முடிவுகளை எடுக்காமல் முடிந்த வரை உறவுகளை இணைப்பதிலே அக்கறை காட்டி வருகிறோம்.
இவற்றை ஆய்வுக் குழுவினர் நேரடியாகவே பார்த்தனர். மேலும் இங்கு வரும் பொதுமக்கள், ஏற் கெனவே வந்து சென்றவர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி அதன் அடிப்படையிலே இந்த தர வரிசையை அளித்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
இந்திய அளவில் 8-வது இடம்
கடந்த ஆண்டு தர வரிசைப் பட்டியலில் தேனி மாவட்டம் பெரிய குளம் தென்கரை காவல் நிலையம் இந்திய அளவில் 8-வது இடத்தைப் பிடித்தது. இந்த ஆண்டு தேனி அனைத்து மகளிர் காவல் நிலை யம் 4-வது இடம் பிடித்திருப்பது காவல் துறையினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இதற்காக அனைத்து மகளிர் காவல் நிலைய காவலர்கள் இனிப்புகளை பரஸ் பரம் வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், மரங்களுடன் கூடிய இயற்கைச்சூழல், வரவேற்பறை, குடிநீர், பொதுமக்கள் அமர இருக்கைகள் உள்ளிட்ட வசதிகள் தேனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் உள்ளன.