Police Recruitment

குடிநீர் பிரச்சனையில் சாதியை சொல்லி திட்டியதால் அடிதடி.
சாதி கலவரம் ஏற்படும் அபாயம் .
எஸ்.பி தலைமையில் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு .

குடிநீர் பிரச்சனையில் சாதியை சொல்லி திட்டியதால் அடிதடி.
சாதி கலவரம் ஏற்படும் அபாயம் .
எஸ்.பி தலைமையில் கமாண்டோ போலீசார் பாதுகாப்பு .

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே கொல்லஅள்ளி காலணியை சேர்ந்த முனியப்பன் மகன் கேசவன் (வயது. 24) கூலித் தொழிலாளி இவரது பெரியப்பா பஞ்சாயத்து குடிநீர் டேங்க் ஆப்ரேட்டராக உள்ளார்.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சோமனஅள்ளியில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் தண்ணீர் நிரம்பி வழிந்|.துள்ளது.
கேசவன் சென்று மின் மோட்டாரை நிறுத்தியுள்ளார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த குண்டன் என்பவர் காலணி பகுதிக்கு மட்டும் அதிகமாக தண்ணீர் ஏன் திறந்து விடுகிறாய் என சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தைகளால் திட்டி அடித்துள்ளார்.
இதனை கேசவனின் பெரியப்பா மற்றும் உறவிணர்கள் சென்று குண்டனை தட்டி கேட்டுள்ளனர்.

அப்போது ஊர் பெரியவர்கள் அக்குமாரியம்மன் திருவிழா நடைபெற உள்ளதால் பிரச்சனை வேண்டாம் என்று குண்டனை மன்னிப்பு கேட்க சொல்லி சமாதானபடுத்தி அனுப்பினர்.

இதனால் கேசவன் கடந்த 2 மாதங்களாக வெளியூருக்கு வேலைக்கு சென்றவர் நேற்று முன்தினம் ஊருக்கு வந்தார்.

இதையறிந்த குண்டனின் உறவினர்களாக ஆறுமுகம் (வயது. 24), முனியப்பன் (வயது .24) மற்றும் சில நண்பர்களுடன் இன்று மாலை கேசவன் வீட்டிற்க்கு சென்று மன்னிப்பு கேட்க வைக்கும் அளவிற்க்கு நீ பெரிய ஆளா என்று கூறி வீட்டின் பூந்தொட்டி, ஜன்னல் கதவுகளை உடைத்துள்ளனர்.

சத்தம் கேட்டு வெளியே வந்த கேசவன், அவரது தாய் மற்றும் அக்காவை ஆறுமுகம் மற்றும் அவனது கூட்டாளிகள் தாக்கிவிட்டு தப்பி சென்றனர்.
இச்சம்பவம் இரு சமுகத்திடையே காட்டுத் தீ போல் பரவியதால் சோமனஅள்ளியில் இரு சமூகத்தை சேர்ந்த ஆட்கள் குவிய தொடங்கினர்.
சாதி கலவரம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மாவட்ட காவல்துறைக்கு கிடைத்த தகவலை அடுத்து மாவட்ட எஸ்.பி.ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் 100க்கும் மேற்பட்ட கமாண்டோ போலீசார் குவிக்கப்பட்டு ஊரை சுற்றி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
தாக்குதலுக்கு உள்ளான கேசவன், அவரது தாய் மற்றும் அக்காவை 108 ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பாலக்கோடு டி.எஸ்.பி. சிந்து, போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் தலைமறைவான் ஆறுமுகம், முனியப்பன் மற்றும் அவர்களது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.
குடிநீர் பிரச்சனையில் சாதி கலவரம் ஏற்படும் அபாயம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.