தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள், நிறுவனங்கள் மீது நடவடிக்கை
தமிழில் பெயர் பலகை வைக்காத கடை, நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிலாளர் நல ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவிட்டி ருந்தார்.
அதன்படி சிறப்பாய்வு மேற்கொள்ள மதுரை பெருமண்டல கூடுதல் தொழிலாளர் ஆணையர் ஜெயபாலன் வழிகாட்டுதல் வழங்கி இருந்தார். இதனை தொடர்ந்து மதுரை தொழிலாளர் இணை ஆணையர் மண்டலத்திற்குட்பட்ட மதுரை, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) தலைமையில் தொழிலாளர் துணை ஆய்வர்கள் மற்றும் உதவி ஆய்வர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு சிறப் பாய்வு மேற்கொள்ளப் பட்டது.
இதில் மொத்தம் 275 கடைகள், நிறுவனங்கள் உணவு நிறுவ னங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப் பட்டு தமிழில் பெயர் பலகை வைக்காத 127 கடை, நிறுவனங்கள் உரிமை யாளர்கள் மீதும் மற்றும் 6 உணவு நிறுவன உரிமையாளர்கள் மீதும் அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
தமிழ்நாடு கடைகள் மற்றும் மற்றும் நிறுவனங்கள் விதிகள். 1948-ல் விதி 15-ன்படியும் தமிழ்நாடு உணவு நிறுவனங்கள் விதிகள் 1959-ல் விதி 42-பி-ன் படியும் பெயர் பலகையில் தமிழ் எழுத்துக்கள் முதலில் வருமாறும் ஆங்கிலம் மற்றும் இதர மொழி எழுத்துக்கள் தமிழுக்கு கீழே வருமாறும் இருக்க வேண்டும்.
மற்ற மொழி எழுத்துக் களை விட தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரியும்படி பெரிய எழுத்தில் வருமாறும் தமிழ் சீர்திருத்த எழுத்துக்களில் இருக்க வேண்டும் என சொல்லப்பட்டுள்ளது.
இதனை பின்பற்றாத கடை நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவன உரிமையாளர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் பட்டுள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட்ட கடை நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் தொடர்ந்து பெயர் பலகையினை மாற்றாவிடில் 2-வது முறை முரண்பாடு கண்டறியப்பட்டால் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேற்படி தமிழ் பெயர் பலகை குறித்து கடை நிறுவன உணவு நிறுவன வர்த்தகர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. மேலும் தற்போது நடந்த ஆய்வில் 1947-ம் ஆண்டு தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்டம் பிரிவு 22-ஏ-ன் படி பணியாளர்களுக்கு இருக்கை வசதி ஏற்படுத்தி தராதது தொடர்பாக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதில் 44 கடைகள் மற்றும் நிறுவன உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்க நடவ டிக்கை எடுக்கப்பட்டது.
தமிழில் பெயர் பலகை வைக்காத கடை நிறுவ னங்கள் மற்றும் உணவு நிறுவனங்கள் குறித்து மதுரை மதுரை மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் மதுரை. தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (0452 – 2604388).
விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் விருதுநகர், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக் கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04562 – 252130). சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் சிவகங்கை, தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04575 – 240521).
ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் ராமநாதபுரம், தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) அலுவலக தொலைபேசி எண்ணிலும் (04567 – 221833) தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்
இந்த தகவலை மதுரை மண்டல தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிர மணியன் தெரிவித்துள்ளார்.