தருமபுரி மாவட்டம் பென்னாகரம் நகர் பகுதியில் அடுத்தடுத்து 3 இடங்களில் கொள்ளை
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் கடைவீதி பகுதியில் தனியார் மருந்து கடை செயல்பட்டு வருகிறது. இவர் வழக்கம் போல் நேற்று மாலை கடையை சாத்திவிட்டு சென்றுள்ளார்.
இன்று காலை வந்து பார்த்த போது பூட்டு உடைந்த நிலையில் சட்டர் பழுதடைந்த நிலையில் காணப்பட்டுள்ளது. இதனைக் கண்ட கடை உரிமையாளர் பென்னாகரம் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன்பேரில் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு விசாரனை செய்தார். கடையில் சுமார் ரூபாய் 15 ஆயிரம் திருடி சென்றதாக கடை உரிமையாளர் கூறியுள்ளார்.
மேலும் சுண்ணாம்புகார தெருவில் உள்ள கரு மாரியம்மன் கோவில் உண்டியல் மற்றும் அருகில் உள்ள ஒரு வீட்டில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
அந்த இடத்தில் நேரில் சென்று பென்னாகரம் இன்ஸ்பெக்டர் திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். நள்ளிரவில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் திருட்டு சம்பவம் பென்னாகரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.