தர்மபுரி மாவட்டம் திருமணம் நிச்சயித்த மறுநாளில் பட்டதாரி பெண் தற்கொலை
தர்மபுரி வேப்பமரத்துக் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மர்லின் பிராண்டோ. இவரது மகள் தீபிகா பிஎஸ்சி பி. எட்., பட்டதாரியான இவர், தர்மபுரியில் உள்ள டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் வேலை செய்து வந் தார். தீபிகாவுக்கு திருமணம் செய்ய பெற்றோர் முடிவு செய்து, அப்பகுதியை சேர்ந்த வாலிபருடன் கடந்த 9ம் தேதி நிச்சயதார்த்தம் நடந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் திடீரென தீபிகா மயங்கி விழுந்தார்.
இதைக் கண்ட பெற்றோர், உடனடியாக அவரை மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில்
சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்தபோது. தீபிகா விஷம் குடித்திருப்பது தெரியவந்தது.
பின்னர், அவரை மேல் சிகிச்சைக்காக,
கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, இரவு தீபிகா உயிரிழந்தார். இதுகுறித்து தர்மபுரி டவுன் போலீசார் வழக் குப்பதிவு செய்து, தீபிகா தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணம் நிச்சயிக்கப்பட்ட மறுநாளில் இளம் பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.