நீதி மன்றத் தீர்ப்புகள்
மனைவியின் கடனுக்கு கணவர் கைது செய்யப்படுவாரா?
(Gujarat High court (19938/2016)Harshad Manubhai Vs State of Gujarat
Decided on 04.04.2017
ஒரு வங்கியில் கணவன் மனைவி இருவரது பெயர்களிலும் ஒரே கணக்கை தொடங்கி பயன்படுத்தி வருகிறார்கள் மனைவி ஒரு அழகு நிலையம் தொடங்கிட திட்டமிட்டு வெளி நபரிடம் கடன் வாங்கி அதற்கு ஈடாக காசோலைகளில் கையெழுத்திட்டு கொடுத்திருக்கிறார் கணவன் தொடக்க நிலையிலேயே புதிதாக எந்த தொழிலும் தொடங்கிட வேண்டாம் அதுவும் கடன் வாங்கி தொழிலை தொடங்கிட வேண்டாம் என அறிவுரித்துள்ளார்
எதிர்பார்த்தது போல் தொழில் வெற்றிகரமாக நடந்திடவில்லை கடன் கொடுத்தவர் அவர் மனைவி கொடுத்த காசோலைகளை வங்கியில் செலுத்தி திரும்பி வந்ததின் அடிப்படையில் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திட்டார் அந்த காசோலை சம்பந்தப்பட்ட வங்கி கணக்கு கணவன் மனைவி இருவரது பெயரிலும் ஜாயின்ட் அக்கௌடில் உள்ளது. எனவே கடன் கொடுத்தவர் கணவன் மனைவி இருவரது பெயரிலும் Negotable instruments act 138 சட்டத்தின் அடிப்படையில் Crpc 482 பிரிவில் நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்திட்டார் இப்போது நீதி மன்றம் கடன் வாங்கிய அவரது மனைவியை மட்டும் தண்டிக்குமா? அல்லது இருவரும் ஒன்று சேர்ந்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் அடிப்படையில் கணவரையும் தண்டிக்குமா? இது போன்ற ஒரு பரபரப்பான வழக்கு குஜராத் அமர்வு உயர் நீதி மன்றத்தில் நீதி அரசர்கள் J.B.pardwala அவர்களின் முன்னியில் வந்தது. காசோலையில் கையெழுத்திட்டு மனைவி வாங்கிய கடனுக்கு அதே வங்கி கணக்கில் கணவனுக்கும் பொறுப்பிருப்பதால் அவரையும் குற்றவாளியாக ஒன்று சேர்த்து பெருநகர நீதி மன்றத்தில் கடன் கொடுத்தவர் வழக்கு தொடர்ந்திருந்தார்
அந்த வழக்கு விசாரணையில் தன்னையும் ஒரு குற்றவாளியாக சேர்த்திருப்பதை ரத்து செய்திடும்படி கணவர் உயர் நீதி மன்றத்தில் மனு செய்திட்டார் மனைவி தான் மட்டுமே காசோலையில் கையெழுத்திட்டு கடன் வாங்கியுள்ளார்
ஒரு வேளை கணவன் மனைவி இருவரும் அந்த காசோலையில் கையெழுத்திட்டிருந்தால் கணவர் மீதும் நடவடிக்கை எடுத்திடலாம் ஆனால் கணவர் அந்த காசோலையில் கையெழுத்திடாத காரணத்தால் பெரு நகர நீதி மன்றம் விசாரணையை ரத்து செய்து உயர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்தது. இதற்கு ஆதாரமாக Aparna A Shah vs Sheth Developers(p) Ltd 2013 /8 Sec71 என்ற வழக்கில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பை ஆதாரமாக காட்டியது.