Police Recruitment

தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம்: சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு:மாநில தகவல் ஆணையர் உத்தரவு

தகவல்கள் கிடைப்பதில் காலதாமதம்: சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு:மாநில தகவல் ஆணையர் உத்தரவு

தகவல்கள் கிடைப்பதில் கால தாமதமானதால் சமூக ஆர்வலருக்கு ரூ.5 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டது. தேனி போடியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். சமூக ஆர்வலரான இவர் தேனி மின்பகிர்மான செயற்பொறியாளர் அலுவலகத்தில் சில தகவல்களை கேட்டு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கடந்த 2020-ம் ஆண்டு மனு அனுப்பினார். ஆனால், அவர் கேட்ட தகவல்கள் முழுமையாக கிடைக்கவில்லை என்று கூறி மேல்முறையீடு செய்தார். அதன்பிறகும் அவருக்கு கேட்ட தகவல்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாநில தகவல் ஆணையத்துக்கு அவர் முறையீடு செய்தார். அதன்பேரில் மாநில தகவல் ஆணையம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியது.
விசாரணையில், 15 நாட்களுக்குள் மனுதாரருக்கு அவர் கேட்ட தகவல்களை கொடுக்குமாறு பொதுத் தகவல் அலுவலரான மின்வாரிய செயற்பொறியாளருக்கு கடந்த ஆண்டு மே மாதம் மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டது. ஆனால், 8 மாத காலம் தாமதமாக அவருக்கு தகவல் வழங்கப்பட்டது. இதனால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல் மற்றும் கால தாமதத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று தகவல் ஆணையத்துக்கு ராமகிருஷ்ணன் கோரிக்கை கடிதம் அனுப்பினார். இதையடுத்து தாமதமாக தகவல் கொடுத்ததால் ராமகிருஷ்ணனுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று பொது தகவல் அலுவலருக்கு மாநில தகவல் ஆணையர் ஸ்ரீதர் உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.